Header Ads



திடீரென கோடீஸ்வரர்களான அரசியல்வாதிகளின், சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டதிருத்தம்

சொத்து விபரங்களை வெளியிடும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திடீரென கோடீஸ்வரர்களான அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் போன்றவர்களின் சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தும் வகையில் சொத்து விபரங்கள் பற்றிய சட்டத்தை திருத்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் சட்டத்தின் அடிப்படையில் சொத்து விபரங்களை வெளியிட்டாலும் அதனை மக்களினால் பார்வையிட முடியாது.

மக்கள் அதனை அறிந்து கொள்வதற்காக சட்டத்தின் 8ம் சரத்தை நீக்குவது குறித்து சட்டவாக்க திணைக்களத்துடன் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

புதிய சட்டத்தின் அடிப்படையில் அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகள் சம்பளத்திற்கு மேலதிகமாக திரட்டும் கறுப்பு பணம் பற்றிய விபரங்களை வெளிக்கொணர முடியும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அரசியல் தொழிலாளர்கள், திருட்டுக் குற்றத்தில் சிக்குவார்களா ??? பொறுத்திருந்து பார்போம்... ஓட்டுவதுக்கு சைக்கில் கூட இல்லாமல் அரசியலுக்க வந்த மண்ணின் மைந்தர்,,,,களுக்கு தான் வயிற்றைக் கலக்கும் !!!


    MOHAMED IRSHATH,
    kattankudy.

    ReplyDelete
  2. அரசியல் தொழிலாளர்கள், திருட்டுக் குற்றத்தில் சிக்குவார்களா ??? பொறுத்திருந்து பார்போம்... ஓட்டுவதுக்கு சைக்கில் கூட இல்லாமல் அரசியலுக்க வந்த மண்ணின் மைந்தர்,,,,களுக்கு தான் வயிற்றைக் கலக்கும் !!!

    ReplyDelete
  3. Nallathai seiya neram kalam parka thevai illai.

    ReplyDelete

Powered by Blogger.