"சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற இரத்தம் கிடையாது"
இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற இரத்தம் கிடையாது. எனவும் இலங்கையில் மனிதாபிமான இரத்தமே உள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சோஸலிச இளைஞர் சங்கத்தின் 3ஆவது தேசிய இளைஞர் மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் சோஸலிச இளைஞர் சங்கத்தின் 3ஆவது தேசிய மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், மதகுருமார்கள், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் 4000 இளைஞர் யுவதிகள் பிரசன்னமாகியுள்ளனர். இதன்போது, கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டு மக்கள் இன்று பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளனர் அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தில் பொது மக்களின் சொத்துக்களே முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யுத்தத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் விதவைகளாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பெற்றோரை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களின் நிலைமை இன்றும் கேள்விக்குறியாகியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மனித பரிமாண வரலாற்றிலே எல்லோரும் சமத்துவமாக வாழ்ந்துவந்த காலத்திலே மதங்களே இருக்கவில்லை.
ReplyDeleteஇடைக்கற்காலம் தாண்டி புதிய கற்காலம் வரை மதம் என்ற எதுவும் உருவாகவில்லை. எப்பொழுது மனித குழுக்கள் விவசாயம் பண்ணை வளர்ப்பை ஆரம்பித்து தனிச்சொத்துகளை சேமிக்க ஆரம்பித்தனவோ.. எப்பொழுதிருந்து தனது சொத்துக்கள் பிறரால் சூறையாடப்பட்டுவிடுமோவெனும் பயம் உருவானதோ அப்பொழுதிருந்து பேய், பூதம், சாமி என்று ஆரம்பித்து விட்டது மதங்கள்.
உலகிலுள்ள உயிரினங்களின் கருவுற்ற முளையத்தை ஒப்பிட்டுப்பார்த்தாலே பெரிய வேறுபாடுகள் தெரியாது. உயிரினங்கள் அனைத்துமே ஒரே மூலத்திலிருந்து கிளைத்து உருவானவைதான் எனும்போது மனிதர்களுக்குள் அதுவும் அவர்களின் இரத்தத்தில் மதப்பிரிவினைகள்தான் ஏது...?
Jessly, பரிணாமம், வளர்ச்சி என்பது குறையுள்ள நிலையில் இருந்து விடுபட்டு, வளர்சியடைவதைதான் குறிக்கிறது. ஆக மனித பரிணாம வரலாற்றில் சமத்துவம் இருந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. பலம், பலவீனத்தை ஆட்சி செய்து வந்தது என்பது தான் உண்மை. அது தான் வரலாறு. இது விலங்குகளுக்கும் பொருந்தும். இந்த இடை வெளியை நிரப்புவதற்கும், இவற்றை எல்லாம் படைத்த சக்தி ( இறைவன் ) தனது படைப்பினங்கள் வாழ வேண்டிய வழிமுறையை வழிகாட்டுவதற்கும் தான், இறைவன் மதத்தை அறிமுகப் படுத்தினான். மதத்தில் பிரச்சினை இல்லை, அதை விளங்கிக் கொள்ளும் மனிதர்களிடத்தில் தான் பிரச்சினை உள்ளது. அதை வைத்துக் கொண்டு குழப்பம் விளைவிக்கும் மனிதர்களிடத்தில் தான் பிரச்சினை உள்ளது.
ReplyDelete"மதம் பிடித்திருந்த மனிதனுக்கு, மதத்தை அறிமுகம் செய்தான் இறைவன்"
ஜ ஜ நேரடியாக குர் ஆன் ஹதீசுக்கு மாற்றமான கருத்தை வெளியிடுகின்றார்.இறைவன் முதல் மனிதனை படைக்கும் போதே யார் இறைவன் யார் மனிதன் யார் மலக்குகள் எவை எல்லாம் என்ன பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது என்ற அடிப்படை அறிவோடுதான் மனிதனை படைத்தான்.கட்டுப்படுதல் என்ற குனாதிசயங்களோடுதான் அறிவூட்டப்பட்டதன் மூலமே முதல் மனிதன் அதம் (அலை )அவர்களுக்கு மலக்குகளை சிரம் பணிய வைத்ததும் அது மலக்குகளோடு சம்மத்தப்பட்டதாக இருந்தாலும்,ஒரு மரத்தை காட்டி இந்த மரத்தின் கனிகளை உண்ணக்கூடாது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றால் அவ்விடத்தில் கட்டுப்படும் ஒரு திட்டமிடல் ஆரம்பமாகிறது.கட்டுப்படல் என்றாலே மதம் ஓன்று அங்கு உருவாகி விட்டது என்பது தெளிவாக புலப்படுகிறது.அந்த கட்டுப்பாட்டை மீறும் அதே சந்தர்ப்பத்தில் அவ்விடத்தை விட்டு வேளியேற்றப்படுகிற்றார்கள் இதன் மூலம் இறைவன் அதாவது படைப்பாளன் அடிமை படைக்கப்படுபவன் என்ற இரண்டு பிரிவு வந்து விடுகின்றது அப்போது படைத்தவனுக்கு அடிபணிதல் வந்துவிட்டால் அங்கு வரக்கூடிய சரத்துகள் சமயம் என்ற பெயரோடுதான் உருவாகும்.2,முதல் மனிதனும் முதல் பெண்ணும் வேளியற்றப்படும் போது அல்லாஹ் சில விடயங்களை கட்டளை இட்டு வேளியற்றுகிறான் அதாவது நீங்கள் இங்கிருந்து வேளியருங்கள் என்னிடம் இருந்து வளிகாட்டுதல் என்னும் நேர்வழி வரும் அதை நீங்கள் பின்பற்றுங்கள் வழி தவற மாட்டீர்கள் கவலைப்பட மாட்டீர்கள் நஷ்டமடைய மாட்டீர்கள் .இவ்விடத்தில் என்னிடம் இருந்து வரும் ஓடர் என்னும்போது அதுதான் மதம்.3 ரசூல் (ஸல் )அவர்கள் சொன்னார்கள் உலகில் பிறக்கும் பிள்ளைகள் அனைத்தும் முஸ்லிமாகவே பிறக்கிறது அவர்கள் யஹூதிகளாகவும் கிறிஸ்தவர்களாகவும் நெருப்பு வணங்கிகளாகவும் பெற்றோரால் தான் மாறுகின்றார்கள் என்று சொன்னால் இங்கு மனிதன் பிறக்கும்போதே இயற்கையாகவே இறைவனால்ஏற்றுக்கொள்ளப்பட்ட மதம் ஒன்றில்தான் பிறக்கிறான்.ஆகவே மதம் மனிதன் படைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின் உருவாக்கப்பட்டது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. (கட்டுப்படுதல் என்றால் முஸ்லிம் )
ReplyDeleteநாத்திக கருத்து.
ReplyDeleteDear brothers, I have a long doubt that J.J can not be a Muslim, the person just covered as a muslim, whatever the person talking is always against to Islamic believe
ReplyDeleteபாவம் அவரை குரைகூறாதீர்கள். அவரைச்சொல்லி குத்தமில்லை. அவர் குர்ஆனை படிக்காதல் பழைய புராணங்களையும் , படங்களையும் பார்த்து வளர்ந்துள்ளார். அதுதான் அவரின் இந்த நிலைக்கு காரணம்.
ReplyDeleteமுதல் மனிதன் ஆதம் (அலை) ஒரு முஸ்லிம் அவர் போதித்ததும் இஸலாம்.ஏக இறைக்கொளகை. நம்தவர்களில் அநேகமானவர் இஸ்லாம் நபியவர்களின் காலத்தில் தான் தோன்றியது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல அவர் இஸ்லாத்தை பூர்த்தி செய்யவந்தவர். காதமுன் நபியீன். ( இறுதி நபி) .
அல்லாஹ் எங்களுக்கும் அவருக்கும் நேர்வழியைக்காட்டுவாயாக.
Guys..beleive this j j is not a muslim. .pretending with a fake profile picture and a name.
ReplyDeleteபாவம் சிலர் பாடசாலையில் படிக்கும் போதுகூட இவ்வாறு குட்டு வாங்கி இருக்க மாட்டார்கள்.
ReplyDelete