இஸ்லாமை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, என உலகிற்கு நிரூபிக்க வேண்டும் - ஒபாமா
மேரிலேண்ட், பால்டிமோரில் உள்ள மசூதிக்குச் சென்றிருந்த ஒபாமா, அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தினரிடையே உரை நிகழ்த்தியுள்ளார்.
இதன்போது, முஸ்லிம்களுக்கு எதிரான டோனல்ட் ட்ரம்பின் கூற்றுக்குத் தனது கண்டனங்களை வெளியிட்டதுடன், மத நம்பிக்கைகளுக்கு எதிரான பரப்புரைகளை ஒருபோதும் அமெரிக்க மக்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் போது இஸ்லாமை ஒடுக்காமல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
9/11 தாக்குதல் முதல் பாரீஸ் தாக்குதல் மற்றும் சான் பெர்னார்டினோ தாக்குதல் வரை பயங்கரவாதத்தின் கொடுஞ்செயல்களை இஸ்லாம் மத நம்பிக்கைகளுடன் இணைத்துப் பேசுவது வாடிக்கையாகி வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய ஒபாமா, முஸ்லிம்களுக்கு ஆதரவாக அமெரிக்கர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

”நீங்கள் முஸ்லிம் அல்லது அமெரிக்கர் அல்ல, நீங்கள் முஸ்லிமாகவும் அமெரிக்கராகவும் இருக்கின்றீர்கள்,” என குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
Post a Comment