யாழ் - பருத்தித்துறையில் ஜும்ஆ மஸ்ஜித், புனர்நிர்மானம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது
-பாறுக் ஷிஹான்-
பருத்தித்துறை ஜும் ஆ மஸ்ஜித் தற்போது'அவ்னுல் ஹைரில் இஸ்லாமி சிறீலங்கி' என்னும் அமைப்பு நிதஉல் ஹைர் நிறுவனத்துடன் இணைந்து மஸ் அத் குலைப் என்பவரின் சதகதுல் ஜாரியா நிதிப்பங்களிப்போடு தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி புனர் நிர்மானம் செய்யப்பட்ட பள்ளிவாயலை இன்று (26-02-2016) வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையினைத் தொடர்ந்து பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
நீண்டகால வரலாற்றைக் கொண்ட இப்பள்ளிவாசல் 1990ல் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் சுமார் 25 வருடங்களின் பின்னர் தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதனை குறித்த பங்காளர்களுடன் இணைந்து யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளை தலைவர் அஸீஷ் காசிமி திறந்து வைத்தார்.
இதன்போது அஸ்-ஷெய்க் நௌபர் (கபூரி) அவர்கள் விஷேட குத்பா பிரசங்கமொன்றினை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வின் மாளிகளைகளின் மீது மக்களுக்கு இருக்கின்ற அமானிதங்கள் குறித்தும் சிறுபான்மையாக வாழும் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் குறித்தும், மீள்குடியேறுகின்ற மக்களுக்கு இருக்கின்ற தேவைகளை எவ்வாறு நிறைவு செய்துகொள்வது என்பது குறித்தும் இவரது விஷேட குத்பா பிரசங்கத்தில் கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பள்ளிவாயலின் பேஷ் இமாம் அஜ்மல் நிதா உல் ஹைர் நிறுவனத்தின் வடக்கு மாகாண பொறுப்பாளர் மௌலவி இப்றாஹிம் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவர் அஸ்-ஷெய்க் அப்துல் அஸீஸ் விஷேட உரைகளை நிகழ்த்தினார்கள்.
மேற்படி பள்ளிவாயல் திறப்பு நிகழ்வில் அரசியல்வாதிகள் வர்த்தகர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். தொடர்ந்து மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வைத் அடுத்து பங்குபற்றிய அனைவருக்கும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் சார்பாக மதியபோசனம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

MashaAllah
ReplyDelete