கற்பிட்டியில் தீவுகளை விற்ற மகிந்த, எஞ்சிய தீவுகளை தற்போதைய அரசாங்கமும் விற்க முயற்சி
கடந்த மஹிந்த ஆட்சியின் போது இலங்கையை சூழவுள்ள பல தீவுகள் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கற்பிட்டியை அண்மிய பகுதிகளில் 25 தீவுகள் உள்ளன. அதில் 14 தீவுகளை மஹிந்த அரசாங்கதினால் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 11 தீவுகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சஜுவ சாம்கர தெரிவித்துள்ளார்.
இந்த தீவுகளை சுற்றி கடற்தொழில் ஈடுபடும் 2,600 மீனவ குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அவ்வாறான நிலைமை காரணமாக சுற்றுச்சூழல் மேலும் பாதிப்படையக். கூடிய வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
கல்பிட்டி கடற்பகுதியை சுற்றுலா வலயமாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பெயரிட்டு, இந்த அழிவை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த ஆட்சியின் போது பாரிய அளவில் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதுள்ள 11 தீவுகளை வணிக வலயங்களுக்கு வழங்குவதன் மூலம் அதனை சுற்றியுள்ள மீனவ குடும்பங்கள் இடம்பெயர்வதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment