கிழக்கு மாகாண சபையில், மேசையின் மீது நின்று உரை - சபை ஒத்திவைப்பு
கிழக்கு மாகாண சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலபதி ஒத்திவைத்தார். மாகாணசபை அமர்வு திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாகாண சபை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கூடியது.
இதன்போது, கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் தொடர்பான பிரேரணையை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்வைத்து சபை அனுமதியையும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தேசிய சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்னாண்டோ, இந்தப் பிரேரணை தொடர்பில் 10 நிமிடங்களுக்கு சபையில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரினார்.
இருப்பினும், அனுமதி கிடைக்காமையை அடுத்து குறித்த மாகாணசபை உறுப்பினர் மேசையின் மீது நின்று தான் உரையாற்றுவதற்கான அனுமதி கட்டாயம் தர வேண்டுமென்று சத்தமிட்டார். இதனைத் தொடர்ந்து சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பஸ் இச்டாண்டில் கச்சான் கொட்ட விற்றவன் மாடு மேய்த்தவன் எல்லாம் சட்ட சபையிலும் பார்லிமண்டிலும் நுழைந்தால் சபை ஒழுக்கம் தெரியாமல் நடப்பதில் என்ன தவறு இருக்கிறது.இது இவர்களின் தப்பு அல்ல வாக்காளர்களின் தப்பு .
ReplyDelete