சிங்கத்தின் இரத்தம் (சிங்ஹ லே) என்பது என்ன..?
- கலாநிதி.ரங்க கலன்சூரிய-
இந்த சிங்ஹ லே இயக்கம் என்பது என்ன? அதன் பின்னாலிருப்பது யார்? இந்தக் sinhaleகேள்விகள் யாவும் சில வாரங்களுக்கு முன்பு அதன் தலைவர்கள் குழுவொன்று எங்கிருந்தோ வந்து கண்டி தலதா மாளிகையின் முன்பாக ஒரு காட்சியை எற்படுத்தும் வரை சமூகத்தினரிடையே எதிரொலித்துக் கொண்டிருந்தன. உண்மையில், கடந்த வருடம் நவம்பர் மாதக் கடைசியில் இருந்து ஆக்கபூர்வமாக வடிவமைக்கப்பட்ட சிங்ஹ லே சின்னம் வாகனங்களில் காட்சியளிக்கத் தொடங்கியது. புதிதாக எழுந்துள்ள இந்த தீவிர தேசியவாத இயக்கத்தின் வரவுக்கான சாத்தியத்தை எண்ணிப் பலரும் ஆச்சரியம் அடையத் தொடங்கினார்கள். மிகவும் முக்கியமாக சிறுபான்மையினர், ராஜபக்ஸ ஆட்சியின் முடிவினைத் தொடர்ந்து தாங்கள் விடும் ஆறுதல் பெருமூச்சுக்கு ஒரு முடிவு வந்து விட்டதோ எனக் கவலைப்படத் தொடங்கினார்கள்.
உண்மையில் சிங்ஹ லே (சிங்க இரத்தம்) என்பதன் எழுச்சி வெகு காலத்துக்கு முன்பே 2010 ம் ஆண்டிலேயே முதன்மையாக வடிவமைக்கப்பட்ட ஒரு வலைத்தளம் இணையத்தில் காட்சிப் படுத்தப் பட்டதிலிருந்து ஆரம்பமாகிவிட்டது, ஆனால் குறைவாகவோ அல்லது கவனிக்கப் படாமலோ இருந்தது. அந்த வலைத்தளத்தின் உரிமையாளர்; மற்றும் வடிவமைப்பாளராக குருநாகலவை சேர்ந்த ஒருவர் இருந்தார், ஆனால் சிங்கள் பௌத்த மக்களிடையே பிரபலமான வர்த்தக அடையாளத்தை பெற கடினமாக முயற்சி செய்தும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. சிங்கள பௌத்த மக்களிடையே அந்த நேரத்தில் தீவிர தேசியவாத தலைமைக்கான போட்டி சிறிது கடுமையானதாக இருந்தது ஏனென்றால் பிரதானமாக அது யுத்த முடிவிற்கு பிற்பட்ட உடனடிக் காலமாக இருந்தது. ஆவேச போக்குடைய பொது பல சேனா(பி.பி.எஸ்) அரசாங்கத்தின் பிரபலப்படுத்தப்படாத அதரவின் கீழ் தாக்கம் பெற்று வந்தது, இதன் காரணமாக சிங்ஹ லே போன்ற புதிய இயக்கங்களுக்கு இணைய வசதிகள் இருந்தும்கூட முன்னுக்கு வர முடியவில்லை.
தொடர்ச்சியாக மறுப்புகள் வெளியிடப் பட்டாலும்கூட, ராஜபக்ஸ ஆட்சியுடன் பொது பல சேனாவுக்கு அறிவிக்கப்படாத ஒரு தேன்நிலவு இடம்பெற்று வந்தது. பௌத்த நிறுவனங்கள் அல்லாதவை – பெரும்பாலும் முஸ்லிம்கள் – நாட்டிலுள்ள பல நகரங்களிலும் தாக்குதலுக்கு உள்ளானபோது குறைந்தது அரசாங்கத்தால் வெறும் அமைதி மட்டுமே பேணப்பட்டது, இந்த வெளிப்படுத்தப்படாத திருமண பந்தம் இதற்கான தெளிவான ஒரு அடையாளம். பொது பல சேனாவினது இந்த சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதுவித கைதோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ளப் படவில்லை. இதற்கு முரணாக சமூக ஊடகங்களில் பொது பல சேனா தலைமை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளருடன் இருக்கும் ஏராளமான படங்கள் வெளியானது மற்றும் இதனால் அந்த இயக்கம் தான் விரும்பிய எதனையும் செய்வதற்கு சுதந்திரம் இருந்தது.
இருப்பினும் உண்மையில் அந்த இயக்கம் தனது பாதையை விட்டு விலகிச் சென்றது மற்றும் அரசாங்கம் அதன்மீதான கட்டுப்பாட்டை இழந்தது. கெட்ட வார்த்தை பேசும் அந்த இயக்கத் தலைவர் ஆட்சியை பகிரங்கமாக விமர்சித்ததுடன், சிலவேளைகளில் அதற்கு சவால் விடுக்கவும் செய்தார். முடிவில் அதுவே அரசாங்கத்தை எய்தவனையே திருப்பித் தாக்கும் பூமாரங் போல திருப்பித் தாக்கியது. சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்து ஆட்சியை மாற்றும் துணிச்சலான முயற்சியை மேற்கொண்டார்கள். தங்கள் மத வழக்கத்தின்படி வழக்கமாக தங்கள் வாக்குகளை பயன்படுத்தாத சில முஸ்லிம் பிரிவினர்கூட வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றார்கள். சிறுபான்மையினர் மட்டுமல்ல பெரும்பான்மை சிங்களவர்களும் சகிக்க முடியாத இனமுறுகல் நிலை காரணமாக சர்வாதிகார மற்றும் தீவிர தேசியவாத ஆட்சிக்கு எதிராக அணி திரண்டார்கள்.
தீவிர தேசியவாத இயக்கங்களின் நிகழ்வுகள் அரசியல் களத்தில் ஆதாயம் பெறுவது ஸ்ரீலங்காவில் ஒன்றும் புதிய விடயமல்ல. சமீபத்தைய கடந்த காலங்களில் அத்தகைய பல இயக்கங்களை நாம் கண்டுள்ளோம், ஆனால் அவை பொது பல சேனாவின் அளவுக்கு நாட்டின் இன நல்லிணக்கத்துக்கு பிரதான சவாலாக ஒருபோதும் மாறியதில்லை. சமீபத்தைய வரலாற்றில் இத்தகைய இயக்கங்களின் வெளிப்பாடானது, பல்கைலைக்கழகங்களை மையப்படுத்திய கலாநிதி.நளின் டீ சில்வாவின் ஜாதிக சிந்தனைய மற்றும் சோபித தேரரின் சிங்கள பல மண்டலய போன்றவைகளால் 80களில் உதயமாகியது, ஆனால் முன்னைய சிஹல உருமய என்கிற ஜாதிக ஹெல உருமய பெற்றதைப் போன்ற உறுதியான அரசியல் களத்தை அவை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை. இது காலஞ்சென்ற கங்கொடவில சோம தேரரின் சமூக அணி திரட்டலினால் ஏற்பட்ட இறுதி விளைவு, அவர் சமய அணி திரட்டல்களை தீவிர தேசியவாத அடித்தளம் மீதான ஒரு அரசியல் சித்தாந்தமாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். கண்டியில் அவர் நிகழ்த்திய அவரது கடைசி உரை அவரது அரசியல் இலட்சியத்துக்கான ஒரு சிறந்த உதாரணமாகும்.
சோம தேரரின் அகால மறைவு மாறுவேடம் பூ+ண்ட ஜாதிக ஹெல உருமயவிற்கு உண்மையில் ஒரு ஆசீர்வாதம் ஆகியது என வாதிடுவது எளிது, அவர் மூலம் அவர்கள் மகத்தான அரசியல் ஆதாயம் பெற்றதுடன், டசின் கணக்கில் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குகளின் பாராளுமன்ற வருகைக்கும் வழியேற்படுத்திக் கொடுத்தார்கள். உண்மையில் பாராளுமன்றத்துக்கு பிக்குகளை கொண்டுவந்த முதல் அரசியல் கட்சி ஜாதிக ஹெல உருமய அல்ல, ஆனால் மஞ்சள் அங்கி தரித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரிய எண்ணிக்கையை அது கொண்டிருந்தது. அரசியல் – மத ஈடுபாடுகளுக்கு அப்பால், ஜாதிக ஹெல உருமயவின் முன்னிலை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுவதுபோல ராஜபக்ஸவை மாவிலாறில் ஆரம்பித்த மோதலை ஒரு முழுநீள போராக மாற்றுவதற்கு இணங்க வைப்பதில் வெற்றிகண்டது ஜாதிக ஹெல உருமயதான்.
எனினும், ஜாதிக ஹெல உருமய மிகவும் இயக்க நிலையுள்ள தீவிர தேசியவாத இயக்கமாக இருந்தாலும் அது அந்த நிமிட தேவைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது என ஒருவரால் வாதிட முடியும். அதன் சமகால கொள்கைக் கட்டமைப்பு தீவிர தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டதல்ல ஆனால் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. அது இனி சிங்கள பௌத்தர்களுக்காக மட்டும் போராடப் போவதில்லை, ஆனால் ஊழல், குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம் என்பனவற்றுக்கு எதிராகப் போராடுகிறது. சம்பிக – ரத்ன தேரர் இரட்டையர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த அடிப்படை மாற்றத்துக்காக தெளிவான மூலோபாயப் பாதையில் கட்சியை வழி நடத்துகிறார்கள்.
பொது பல சேனாவிடம் இந்த மூலோபாய யோசனை குறைவு, ஆனால் ஒரு சீன மட்பாண்டக் கடையினுள் எருமை புகுந்தது போல செயற்படுகிறார்கள். அதன் மேடை வெறுப்பு பேச்சுக்கள் நிரம்பியதாகவும் மற்றும் அதன் எந்த ஒரு நிகழ்வும் பண்பாடுள்ள கலாச்சார நடத்தையற்றதாகவும் உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்டதினூடாக மேற்கொண்ட பரீட்சையின்படி, அதன் அரசியல் அடித்தளம் மற்றும் பிரபலத் தன்மை என்பனவற்றை ஒருபோதும் அது சரியாக மதிப்பிட்டதில்லை. அதற்கு கிடைத்த பளிச்சென்ற அதிர்ச்சி தரும் முடிவுகளை அடுத்து அது மௌனமாக இருப்பது என்று முடிவு செய்தது – அநேகமாக ஒரு தற்காலிக காலத்துக்கு. பெரும்பான்மை என்பது மௌனம் என்கிற பிரபலமான சொல்வழக்கின் உண்மையான அர்த்தத்தை அது புரிந்து கொண்டிருந்தால் அதில் ஆச்சரியமில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் யகபாலன ஆட்சியை மதிப்பிடும் நோக்கில் பொது பல சேனா சக்தியான மௌனத்தைக் கடைப்பிடித்தது. அதைப் போன்ற இயக்கங்களான ராவண பலய (சக்திவாய்ந்த முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமைச்சர் ஒருவரின் பின்துணையுள்ளது) சிங்ஹள ராவய என்பனவும் கூட மௌனத்தில் ஆழ்ந்திருந்தன.
இதன்படி ராஜபக்ஸ ஆட்சியை வெளியேற்றியது மற்றும் பொது பல சேனா மௌனத்தை கடைப்பிடித்தது என்பனவற்றின் காரணமாக சிங்கள பௌத்த தீவிர தேசியவாத மேடையில் குறைந்தது ஒரு வருடத்துக்காவது ஒரு வெற்றிடம் நிலவியது. ஊடக சித்து விளையாட்டுகள் ஊடாக கடந்தகாலத்தில் இன – தேசியவாத முறுகல் நிலையினை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அது எதிர்பார்த்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தச் சூழ்நிலையில் கடந்த வருடம் நவம்பரில் பரீஸ் தாக்குதல்கள் இடம்பெற்றன மற்றும் இதன் காரணமாக முகப் புத்தகத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் பயன்பாட்டாளரின் சுயவிபர படத்திற்காக பிரான்சின் தேசியக் கொடியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் ஒரு முகப் புத்தக பிரச்சாரம் இடம்பெற்றது.
இந்த தனித் தன்மையான முகப் புத்தக பிரான்சிய கொடியின் சுயவிபரப் பிரச்சாரம், மேலே குறிப்பிட்ட குருநாகல்லைச் சேர்ந்த சிங்ஹ லே வலையமைப்பாளருக்கும் மற்றும் பதுளையை சேர்ந்த அவரது சகா ஒருவருக்கும் இந்த பிரான்சிய கொடி பாணியிலான முகப்புத்தக பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒரு புதிய யோசனையை தோற்றுவித்தது. அதன்படி முகப் புத்தகத்தில் சிங்ஹ லே சின்னம் தோன்றியது, மற்றும் ஒரு அரைமணி நேரத்துக்குள்ளேயே அது 25,000க்கும் மேற்பட்ட வெற்றிகளைப் பெற்றது. அதன்படி அது ஒரு சின்னமாக ஆரம்பமானது – ஒரு அரசியல் இயக்கமாக அல்ல என்று தெரிவித்தார் ஒரு புலனாய்வு அதிகாரி. “சில சந்தர்ப்பங்களில் சில முஸ்லிம் வியாபாரிகள் சிங்ஹ லே ஸ்டிக்கர்களை 500 ரூபாவுக்கு கூட விற்றார்கள்” என அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த இரட்டையர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் கடந்த அரசின் முகாமினை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது.
சில ஊடகங்கள் தெரிவிப்பதின்படி சிங்ஹ லே சின்னத்தின் முகாமையாளர்கள் அதற்கு அரசியல் அடையாளம் கொடுப்பதற்காக முயற்சி செய்தார்கள் என்றும் மற்றும் அவர்கள் அதற்காக பொது பல சேனாவுடன் நடத்திய சந்திப்புகள் வெற்றி பெறவில்லை என்றும் தெரிகிறது. எனினும் அநேக பிக்குகள் அந்தச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்தார்கள் – முன்னாள் சிங்கள ராவய தலைவர் மெதில்லே பன்னாசீக மற்றும் யக்கலமுல்ல பாவார தேரர்கள் ஆகியோர் ஏனைய மூன்று பிக்குகளுடன் சேர்ந்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்கள். வலை வடிவமைப்பாளர்களான இரட்டையாகள் பொதுநிலைத் தலைவர்களாக உள்ளார்கள். ஜனவரி நடுப் பகதிக்குள் அந்தச் சின்னம் கணிசமான வேகத்தில்; அதன் தாக்கத்தை பெற்றுக் கொண்டது. உதய கமன்பில இதற்குப் பின்னால் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள், ஆனால் நான் அறிந்த அளவில் அவர் அதிலிருந்து பலன் பெற முயற்சிக்கிறார்.
சிங்ஹ லே சின்னத்தின் வேகமாகப் பரவும் தாக்கத்தை கண்ட பொது பல சேனா, இந்த எழுச்சி பெறும் குழுவுடன் ஓரளவு போட்டி போடுவதற்காக கடையில் எருமை புகுந்த பாணியில் ஹோமகம நீதவான் நீதிமன்றத்துக்குள் புகுந்து விளையாடி உள்ளது. நீதியின் மதிப்பை பாதுகாப்பதில் நீதவான் உறுதியாக நின்றதால் ஞ}னசார தேரரின் முழு வியூகமும் இலக்குத் தவறிவிட்டது. நீதிமன்றத்தில் ஒரு அருவருப்பான காட்சியை அரங்கேற்றிய அவரது சக பிக்குகள்கூட அதன் வெப்பத்துக்கு இப்போது முகம் கொடுக்கிறார்கள்.
சிங்ஹ லே இன்னமும் ஒத்திசைவான அரசியல் தாக்கம் இல்லாத ஒரு சின்னமாகும் – ஆனால் அதனிடம் ஆபத்தான சித்தாந்த அமைப்பு உள்ளது. ஆயினும்கூட எந்தவித தீவிர தேசியவாத இயக்கமும் இந்த நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தி இன நல்லிணக்கத்தை அழித்துவிடும். கடந்த 30 வருடங்களாக இந்த மண்ணின்மீது நாங்கள் வேண்டியளவு இரத்தம் சிந்நிவிட்டோம் – அதன்படி எந்த சிங்கத்தினதோ அல்லது வேறு எதனது இரத்தமோ ஒரு சின்னமாக நமக்குத் தேவையில்லை. எப்படியாயினும் எங்களை இரத்தச் சின்னத்தின் மூலம் அடையாளப் படுத்துவதற்கு இது ஏற்ற நேரமில்லை – முன்னுரிமைகள் மற்றும் சவால்கள் இப்போது வித்தியாசமானவை.
இதுவரை அவர்கள் நாட்டின் எந்த சட்டத்தையும் மீறியிருந்தால், அரசாங்கம் உதவியற்ற நிலையில் உள்ளது என்று ஒருவர் சொல்லக்கூடும். அதனால்தான் நாட்டின் இன மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்கக் கூடிய வெறுப்பு பேச்சு சட்டங்கள் நமக்கு அவசியமாக உள்ளன.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

சிறப்பான பார்வையுள்ள இன்னும் சிறிது ஆழம் வேண்டிநிற்கும் கட்டுரை!
ReplyDeleteபுரவெசி பலய இயக்கத்தின் காமினி வியங்கோட 04/02/2016 அன்று ஹிரு TV ல் நடைபெற்ற விவாதத்தின்பொது சின்ஹலே சம்பந்தமாக அளித்த விளக்கங்கள்: "இந்நாட்டு சிங்கள புத்தி ஜீவிகள் உண்மையில் இந்த சிங்கம் பற்றிய உண்மையை மிக அருவருப்புடன் தான் நோக்குவார்கள். ஏனென்றால் இந்த சிங்கத்தின் வம்சக் கதை வெறுக்கத்தக்க முன்று விடயங்களைக் கொண்டிருக்கின்றது. முதலாவது தான், சுப்பாதேவி காட்டில் போகும் பொழுது இந்த சிங்கம் அவளைக் கடத்திக்கொண்டு கற்குகைக்குக் கொண்டு செல்கிறது அல்லது அவள் சிங்கத்தின் மீது காதல் கொண்டு சிங்கத்துடன் செல்கிறாள். மிருக இனத்தைச்சேர்ந்த இந்த சிங்கத்துக்கும் மனித இனத்திலுள்ள அந்த ஸ்திரீக்கும் இடையில் சம்பவிக்கும் உறவின் விளைவாக சிங்கபாஹு என்ற மகனும் சிங்க சீவலி என்ற மகளும் பிறக்கிறார்கள். நம் நாட்டு குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் ஒரு மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையில் பாலுறவு சம்பவித்தால் அது 20 வருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் ஒரு குற்றமாகும். அப்படியென்றால் - உண்மையில் இது ஒரு யூகக் கதையாக இருந்தாலும் - நமது ஆரம்பமே அப்படி ஒன்றில் இருந்து தான் என்று நாம் கூறிக்கொள்கிறோம். அடுத்த சம்பவம் என்னவென்றால் 'பிதிர்காதகம்' அதாவது தந்தைக்கொலை சம்பவக்கின்றது. இந்த இரண்டு மக்களில் மூத்தவன், அதாவது மகன் தனது தந்தையைக் கொள்கிறான். இதுதான் எமது இரண்டாவது பிணைப்பு. இதன் பின் சிங்கபாஹு என்ன செய்கின்றான்..? தன்னுடன் ஒரே வயிற்றில் ஒரே சமயத்தில் இரட்டைக் குழந்தைகளாக ஒன்றாய்ப் பிறந்த தனது சகோதரியை தனது மனைவியாக எடுக்கிறான். எமது சட்டத்தில் இது முறை தகா உறவு என்று அழைக்கப்படும். ஒரே குடும்பத்தின் உறவுகளுக்கிடையில் ஏற்படும் இவ்வாறான தொடர்பும் தண்டனைக்குரிய குற்றமாகும். எமது ஆரம்பமே எமது சட்டத்தின் அடிப்படையில் குற்றம் என்று காணப்படும் இரண்டு விடயங்களை சுமந்து காணப்படுகின்றது. அந்த சிங்கத்தில் இருந்து தான் நாம் வந்திருக்கின்றோம். அந்த சிங்கத்தின் இரத்தம் தான் எமது உடலில் ஓடிக்கொண்டிருக்கின்றது என்றால் நாம் இதை வெளியே சொல்ல வெட்கப்பட வேண்டாமா? எமது மக்களுக்கு நாம் இந்த உண்மையை எடுத்துச் சொல்வது எமது கடமையாகும்......"
ReplyDeleteYoutube ல் முழு நிகழ்ச்சியையும் பார்க்க இணைப்பு :
https://www.youtube.com/watch?v=CK414a63FBY#t=115