Header Ads



இலங்கையின் சுதந்திர தினமும், பேஸ்புக் பத்வாக்களும்..!


-Inamullah Masihudeen-

நேற்று 04.01,2016 நாடு முழுவதிலும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை முன்னொரு பொழுதும் இல்லாத வகையில் சிறப்பாக கொண்டாடியமை பாராட்டத்தக்க விடயமாகும்.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பு, தேசியவாழ்வில் முஸ்லிம்களது பங்கேற்றல், தேசத்தின் மீதான உரிமை, பற்றுதல் என்பவற்றை இவ்வாறான தேசிய நிகழ்வுகளில் பொழுது நாங்கள் வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதனை விட எமது வரலாற்றுக் கடமையாகும்.

அந்த வகையில் குறை நிறைகள் இருந்தாலும், நாடு தழுவிய வகையில் சுதந்திரதின நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்த மஸ்ஜிதுகள், அமைப்புக்கள், பாடசாலைகள், சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரையும் நன்றியுடன் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

என்றாலும், இவ்வாறான தேசிய நிகழ்வுகளை நாம் அனுஷ்டிக்கும் பொழுது எமக்கே உரிய தனித்துவமான வரைமுறைகளைப் பேணி ஏனைய சமூகங்களுடன் இணைந்து தேசிய ஐக்கியத்தை, ஒருமைப்பாட்டை, சமாதான சகவாழ்வை சாத்தியமாக்க வல்ல எளிமையான நிகழ்வுகளை வரம்புகள் மீறாது மேற்கொள்வதே சிறந்ததாகும்.

உதாரணமாக ஒரு ஊரில் உள்ள எல்லாப் பள்ளி வாயல்களிலும், மதரசாக்களிலும், நிகழ்வுகளை நடத்துவதும், ஒவ்வொரு தனிப்பட் அமைப்புக்களும், இயக்கங்களும்,வர்த்தக சங்கங்களும் தனித்தனியாக தத்தமது அடையாள அலங்காரங்களோடு, சீருடைகளோடு ,விளம்பரங்களோடு வீண் விரயங்களோடு சுதந்திரதின நிகழ்வுகளை நடத்துவது ஒரு வகையான வரம்புமீறலாகும் என்றே கருதுகின்றேன்.

மாறாக, எல்லோரும் பொதுவான ஒரு மைதானத்தில் பிற சமூகங்கள் இருந்தால் அவர்களுடனும் இனைந்து அல்லது அவர்களுக்கு மத்தியில் அருகாமையில் வாழுகின்றவர்கள் அவர்களுடன் சேர்ந்து மரம் நடல், பொது இடங்களில் சிரமதானம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், போன்ற ஒரு சில பயனுள்ள நிகழ்வுகளை நடத்துவதே சாணக்கியமும், சமயோசிதமும் ,சாதுரியமும் உள்ள சமாதான சகவாழ்விற்கு வழி கோலுகின்ற முன்மாதிரியான நடைமுறையாக இருக்கும்.

என்றாலும் எல்லா பொது இடங்களிலும், வீடுகளிலும், கடைகளிலும், வாகனங்களிலும் தேசியக் கொடியை ஏனைய சமூகங்கள் போன்றே நாமும் பறக்க விடுதல் சிறந்ததாகும்.

இன்ஷாஅல்லாஹ், இது குறித்த தெளிவான சில வழி காட்டல்களை புத்திஜீவிகளும் சமூக அமைப்புக்களும் பொறுப்புணர்வுடன் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

தேசிய கீதம் இசைக்கப்படும் பொழுது முஸ்லிம்கள் அடுத்த சமூகங்களோடு எழுந்து நிற்பதில் தவறில்லை, அதே போன்று சிங்கள தமிழ் மொழியில் "நமோ" "நமோ" என்ற வசனத்தை "கௌரவம்" என்று மனதில் கொண்டு கீதத்தை பாடவும், அவற்றை "இபாதத்" அல்லது "ருக்கூஉ" "ஸுஜூது" ஆக கருத வேண்டியதில்லை, அதேபோல் ஏனைய பிரயோகங்களையும் கருத்திற் கொள்ளவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு சொல்வதற்கும் மனம் இடம்தரவில்லை எனில் மௌனமாக இருப்பதில் எந்த தவறும் இல்லை, கட்டாயமும் இல்லை, ஆனால் முஸ்லிம்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கத் தேவையில்லை, அதனை பாடவும் கூடாது என சமூக வலைதள பத்வாக்கள் வழங்குவதும், அவற்றை பொறுப்பற்ற வகையில் ஊடகங்கள் பிரசுரிப்பதும் இஸ்லாம் பற்றிய பிழையான கருத்தோட்டத்தையே முஸ்லிம் அல்லாதவர்களிடமும், இளம் தலை முறையினரிடமும் விதைக்கின்ற நடவடிக்கைகளாகும்.

இவ்வாறான புரிந்துணர்வுகளுடன் கூடிய நடைமுறைகளையே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய ஷூரா சபை, மற்றும் முஸ்லிம் சிவில் அரசியல் தலைமைகள் விரும்புகின்றன.

2 comments:

  1. //அவ்வாறு சொல்வதற்கும் மனம் இடம்தரவில்லை எனில் மௌனமாக இருப்பதில் எந்த தவறும் இல்லை, கட்டாயமும் இல்லை, ஆனால் முஸ்லிம்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கத் தேவையில்லை, அதனை பாடவும் கூடாது என சமூக வலைதள பத்வாக்கள் வழங்குவதும், அவற்றை பொறுப்பற்ற வகையில் ஊடகங்கள் பிரசுரிப்பதும் இஸ்லாம் பற்றிய பிழையான கருத்தோட்டத்தையே முஸ்லிம் அல்லாதவர்களிடமும், இளம் தலை முறையினரிடமும் விதைக்கின்ற நடவடிக்கைகளாகும்.//
    No comments

    இவ்வாறான புரிந்துணர்வுகளுடன் கூடிய நடைமுறைகளையே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய ஷூரா சபை, மற்றும் முஸ்லிம் சிவில் அரசியல் தலைமைகள் விரும்புகின்றன.
    again no comments and
    Allahs knows best
    allah akbar

    ReplyDelete
  2. It is not a issue, if independent celebration organised and held in a public place with all the community. But it is not accepted jayamangalagatha happening in front of of mosque.

    ReplyDelete

Powered by Blogger.