Header Ads



தாய்நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்த அஸ்ரபிற்கு, சொந்தஊரில் மகத்தான வரவேற்பு (படங்கள்)


-யு.எல்.எம்.  றியாஸ்-

இந்தியா குவாஹதி நகரில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4x100 மீற்றர் போட்டியில் தங்கப் பதக்கமும், 100 மீற்றர் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று தாய்நாட்டிற்கும் தனது பிரதேசத்திற்கும் கௌரவத்தை பெற்றுக்கொடுத்த பொத்துவிலைச் சேர்ந்த ஏ.எல்.எம். அஸ்ரபிற்கு இன்று  (18.02.2016) அவரது  சொந்தஊரில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

பொத்துவில் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பொத்துவில் மண்ணும், மக்களும் இணைந்து அவருக்கு மகத்தான கொஎரவத்தையும் வரவேற்பையும் வழங்கினார்கள்.

பொத்துவில் மணிக்கூட்டு சந்தியில் வைத்து ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டு பிரதான வீதியூடாக சின்ன உல்லை வரை  ஊர்வலம்  சென்றது .

இதன்போது மக்களால் பொன்னாடை போற்றி அஸ்ரபின் வெற்றிக்கு வாழ்த்துக்களை வழங்கினார்கள்.


4 comments:

  1. வாழ்த்துக்கள் bro...

    ReplyDelete
  2. எந்தவொரு விளையாட்டு வசதிகளோ முறையான பயிற்றுனர்களோ இல்லாத பிரதேசமொன்றிலிந்து இவ்வளவு தூரம் முன்னேறிச் சென்றமை மிகவும் பாராட்டத்தக்கது.
    இவர் போன்றோருக்கு துறை சார்ந்த பயிற்சிக்களம் கிடைக்கின்ற போது மேலும் முன்னேற முடியும்.
    குமார் சங்கக்கார இதற்கு நல்ல உதாரணம். ஆரம்பத்தில் அவர் அவ்வளவு சோபிக்கவில்லை. முறையான பயிற்சியும் வளங்களும் கிடைத்ததும் அவரின் திறமைகள் சிறப்பாக வெளிக் கொணரப்பட்டன.

    ReplyDelete

Powered by Blogger.