பாராளுமன்றத்திற்குள் ஒன்றிணைந்த, எதிர்க்கட்சியை ஏற்கமறுக்கும் ரணில்
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு எதிர்க்கட்சி மாத்திரமே இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி என்றும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்றும் பாராளுமன்ற சபைக்குள் கூற முடியாது என பிரதமர் கூறியுள்ளார்.
அதனால் ஒரு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் பாராளுமன்றத்திற்குள் செயற்படுவோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தாம் கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் வசமே இருக்க தாம் இடமளிப்பதாகவும், தமக்கு எதிர்க்கட்சி குழுவாக செயற்படுவதற்கு மாத்திரம் இடமளிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கான சம்பிரதாயம் பாராளுமன்றத்தில் இல்லை என்றால், அதற்கான சம்பிரதாயமொன்றை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment