"மைத்திரியும், ரணிலும் அமெரிக்காவின் கைப்பொம்மைகள்"
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்ற அச்சத்தினாலேயே அவர் மீதும் அவரது குடும்பம் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சேறு பூசும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவதைத் தடுத்து தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து நீடித்துக் கொள்வதற்கு இந்த அரசாங்கத்தினால் மஹிந்த கைது செய்யப்படலாம். நல்லாட்சி என்ற போர்வையில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலே செயற்படுத்தப்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினுடைய மெதமுலான வீட்டு வளாகத்தில் தங்கம் மற்றும் ஆயுதங்கள் மறை த்து வைத்திருப்பதாக கூறி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் அமெரிக்காவின் கைப்பொம்மைகளாகவே செயற்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான செயற்பாடுகளே தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் மக்களது பிரச்சினையை தீர்ப்பதோ மனித உரிமைகளைப் பாதுகாப்பதோ அமெரிக்காவினது நோக்கமல்ல. மாறாக இந்து சமுத்திரத்தில் கால்பதித்து தமது அரசியல் ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்பதே அவர்களது பிரதான நோக்கம்.
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் மீதும் மக்கள் அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்துள்ளனர். எனவே மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.
இதனைக் கண்டு அச்சமடைந்துள்ள இந்த அரசாங்கம் மஹிந்த ராஜபக்ச மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி சேறு பூசி வருகின்றனர்.
இதற்கு முன்னர் தங்கம் மறைத்து வைத்திருப்பதாக கூறி பீக்கொக் மாளிகையில் மூடப்பட்டிருந்த நீச்சல் தடாகம் தோண்டப்பட்டது.
ஆனால் தங்கம் இருக்கவில்லை. தற்போது மெதமுலானவில் பெக்கோ இயந்திரம் போட்டு நிலம் தோண்டப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் எதுவும் மீட்கப்படவில்லை.
இதுதான் தற்போதைய நிலைமை. மஹிந்த ராஜபக்ச மீது சேறுபூசி அவருக்கு ஆதரவாக இருக்கும் அரசியல்வாதிகளை அச்சுறுத்தி மஹிந்தவினுடைய அரசியல் பயணத்தை தடுப்பதே இவர்களது நோக்கமாகவுள்ளது.
எனவே மஹிந்த ராஜபக்சவை கைது செய்தாலும் புதுமைப்படுவதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
உங்கள் வாதப்படியே வைத்துக்கொண்டாலும்...
ReplyDeleteஉங்கள் சீனாவின் பொம்மையை விட அமெரிக்காவின் பொம்மைகள், வெள்ளை வேன்கலாசாரமற்ற.. பேருவளையைக் கொளுத்தாத.. பள்ளிவாசல்களை உடைக்காத.. கிறீஸ்பூதங்களற்ற நீதியானதும் அமைதியானதும் எதேச்சாதிகாரமற்றதுமான ஆட்சியை நடாத்துகின்றனவே.
Mahinda and his supporters have a bigger fear than this .
ReplyDeleteThey fear that Mahinda may be sent to electric chair . So
why not send him to Welikada for safety ? Nobody can come
and catch him as happened to Saddam Hussain or Bin-Laden!
Guaranteed safety is Welikada for the whole family !He
can have , Johnston , Mahindananda , Abeygune and even
Dinesh and Wimal with him for his company ! Safe and well
from the electric chair ! I recommend this .