Header Ads



வாழ்நாள் தண்டனையை அனுபவிக்கிறேன் - அளுத்கமயில் மகிந்த உருக்கம்

மின்சார நாற்காலியில் இருந்து தப்பினாலும் தற்போது அதனை விட அழுத்தங்களுக்கு தான் உள்ளாகி இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் இன்று .15. உடற்பயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.

மின்சார நற்காலிக்கு அனுப்புவதை விட மனரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள் போதுமானது. மின்சார நாற்காலிக்கு கொண்டு சென்றது போல்தான் இதுவும். அது ஒரு முறைதான் இது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் தண்டனை.

அதேவேளை ஒரு போதும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன்.

அவ்வாறு துரோகியானதும் இல்லை. 58 லட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. அதற்கு பிறகு வாக்களித்த 48 லட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. ஆனால் துரோகியானது யார் என்பதே கேள்வி.

ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கத்தில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருக்கின்றது. அந்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்துடன் உள்ளது.

டொஸ் பந்துகளை வீசுகின்றனர். அவர் சங்ககாரவை போல் சிக்ஸர்களை அடிக்கின்றார். மக்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை கோரியுள்ளதுடன் அதற்கு தலைவரை தேடிக்கொண்டிருக்கின்றனர் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அப்போ மக்களால் தோற்கடிக்கப்பட்டவர், இலங்கை வரலாற்றிலே முதற்தடைவை சனாதிபதியாய் இருந்து தோற்றவர் என்ற பெருமை யாரை அய்யாசேரும்!

    ReplyDelete

Powered by Blogger.