Header Ads



உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த, ஒன்றிணைந்த எதிர்கட்சி கோரிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, ஜி.எல். பீரிஸ், விமல் வீரவன்ச, கம்பன்பில மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் இன்று மாலை தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை முடிவில்  ஊடங்களுக்கு கருந்து தெரிவித்த தினேஷ் குண­வர்­தன,

இந்த அரசாங்க மக்களுக்கு சேவையாற்றும்  சேவகர்களை நியமிக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பல காரணங்களை கூறி தாமதமாக்கி கொண்டிருக்கின்றது.

தேர்தல்களை குறித்த காலத்தில் நடத்துவதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மஹிந்த ராஜபகஷ ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபணத்தில் தெரிவித்திருந்தும் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தேர்தலை சரியான நேரத்தில் நடத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாகிய நாங்கள் முன் நின்று செயல்படுவோம் என்றார்.

No comments

Powered by Blogger.