Header Ads



ஆசிரியையை மண்டியிடசெய்த அரசியல்வாதி பிரதம அதீதி, விசாரணை ஆரம்பம்

தமது மகளை கண்டித்த ஆசிரியையை மண்டியிட செய்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரை, நிகழ்வு ஒன்றுக்கு பிரதம அதிதியாக அழைத்த, பாடசாலை அதிபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான உத்தரவை, வடமேல் மாகாணசபை பிறப்பித்துள்ளது.

வடமேல்மாகாண கல்வி அமைச்சர் சந்தியாகுமார ராஜபக்ஸ இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோரின் வருகையின்போது மாத்திரமே பேன்ட் வாத்தியத்தை இசைக்க முடியும் என்று சுற்றுநிருபம் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சரத்குமாரவை வரவேற்க பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டமை குறித்தும் மாகாண அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நவகத்தேகம நவோதயா வித்தியாலயத்தின் அதிபர் மல்கம் பீட்டர்சன், ஆசிரியை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வுக்கு அழைத்திருந்தார்.

இந்த பாடசாலை ஆசிரியை ஒருவரையே சரத்குமார பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் மண்டியிட செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்காக அவருக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் தாம் மாத்திரம் சரத்குமாரவை அழைக்கும் முடிவை எடுக்கவில்லை.

பாடசாலையின் 15பேரைக்கொண்ட விளையாட்டுக்குழுவே இந்த முடிவை மேற்கொண்டதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அடுத்தது பிரிஞ்ச பெல்ல முட்டி போட வைப்பான்

    ReplyDelete

Powered by Blogger.