யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய, புதிய நம்பிக்கை
-பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்டத்திற்கான முஸ்லிம் மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் காணி விவகார செயலணி ஏகமனதாத் தெரிவு செய்யப்படுள்ளதாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் தெரிவித்தார்.
அமைச்சர் அமீர் அலி முன்னிலையில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இச்செயலணி உருவாக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்.
கடந்த வருடம் டிசம்பர் 20ம் திகதி பாராளுமன்றத்தில் கமிட்டி அறை 2ல் நடைபெற்ற வடமாகாண முஸ்லிம்களின் காணி விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் இணை தலைமையில் ஆரோக்கியமான கருத்துக்களை முன் வைக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு இரு தரப்பினரும் இணைந்து தீர்வு காண வேண்டும் என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் வடமாகாண முஸ்லிம்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் என்ன? என்பதனை களவிஜயம் செய்து ஆராய்ந்து அறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மாவட்ட ரீதியாக அ.இ.ம.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் நியமித்ததுடன் இந் நடவடிக்கைகளை கட்சி அரசியலுக்கு அப்பால் சகலரையும் இணைத்துக் கொண்டு ஒன்றிணைந்து செயற்படுமாறும் வலியுறுத்தி இருந்தார்.
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பிரதி அமைச்சர் அமீர் அலியை நியமித்திருந்தார்.
இதற்கமைய யாழிற்கு மேற்குறித்த திகதியில் வருகை தந்திருந்த பிரதி அமைச்சர் அமீர் அலி முஸ்லிம்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை யாழ் அராலி வீதி பரச்சேரிவெளி வேலணை அல்லைப்பிட்டி சாவகச்சேரி தனங்கிளப்பு நுணாவில் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆராய்ந்ததுடன் மாலை யாழ் முஸ்லிம் மக்களின் ஒன்று கூடலிலும் கலந்து கொண்டார்.
இதன் போது பிரதி அமைச்சர் அமீர் அலி தனது யாழ் வருகையின் நோக்கத்தை தெளிவுபடுத்தியதுடன் தனது நேரடி களவிஜயத்தைப் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறியதுடன் இவ் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மக்கள் ஒரு குழுவைத் தெரிவு செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார்.
அவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து விரைவாகச் செயற்படுவதுனூடாக விரைவில் காணியற்றவர்களுக்கு காணி பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் வீட்டுத்திட்டங்களும் கிடைக்கும் வாய்ப்புண்டு என வலியுறுத்தினார்.எனவே தான் இக்குழு அதற்காக நியமிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து பின்வருவோர் முன்மொழியப்பட்டு இது சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மௌலவி பி.ஏ.எஸ் சுபியான்
எம்.ஜமால் மொகைதீன்
அமீன் ஹாஜியார்
பி.ஏ.சி முபீன்
பி. சரபுல் அனாம்
எம். சியானாஸ் தாஹிர்
ஆர்.கே சுவர்கஹான்
கே.எம் நிலாம்
எம்.முஜாஹித்
பி.எம் ரஹீம்
எம். கலீல்
யு சுவைஸ்
யு.எம் சினாஸ்
யு.ஆ. தையூப்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இக்குழுவினர் எதிர்வரும் 05.03.2016 யாழ்ப்பாணம் மன்பஉலும் பாடசாலை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு முதல் கூடி ஆராயவுள்ளனர்.
இக் கூட்டத்தில் பரச்சை வெளியில் காணியுள்ள உரிமையாளர்களைச் சந்திப்பதுடன் அல்லைப்பிட்டி அரச காணி விடயம் தொடர்பாகவும் முழுத் தகவல்களும் பரிசீலிக்கப்பட இருக்கின்றது.
இது தவிர மேலும் குடியேற்றத்திற்கு ஏற்ற வகையில் யாழ் மாவட்டத்தில் அண்மித்த பகுதியில் முஸ்லிம்களுக்குரிய காணிகளிலிருந்தால் அது பற்றிய தகவல்களையும் திரட்டி ஆராய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
.
இதனிடையே பிரதி அமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கமைய மண்கும்பாண்இநயினாதீவுஇ பருத்தித்துறைஇ கொடிகாமம் போன்ற பகுதிகளுக்கும் களவிஜயம் செய்து அங்குள்ள காணிகள் தொடர்பான தகவல்களையும் அங்குள்ள மக்களை சந்திப்பதனூடாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இது தவிர யாழ் மாவட்டத்திற்குரிய முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு பொருத்தமான காணிகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் அவைகள் தொடர்பாகவும் ஆராய முடியுமென அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் தெரிவித்தார்.
Post a Comment