Header Ads



ஜெயலலிதாவை அட்டாக் செய்ய, “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?”

ஜெயலலிதாவை அட்டாக் செய்த புது விளம்பரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது திமுக. இன்றைக்கு பேப்பர்,டிவி, டுவிட்டர், ஃபேஸ்புக் என அனைத்திலும் இந்த விளம்பரம்தான் வாக்காளர்களை அட்டாக் செய்தது. திமுக கொடுத்துள்ள லேட்டஸ்ட் விளம்பரத்தில் உபயோகப்படுத்தியுள்ள “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?” என்ற வார்த்தை ஜீ டி.வியில் வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் பயன்படுத்தியது.

இந்த வார்த்தை தமிழகம் முழுவதுமே ரொம்ப பிரபலம். இதனை கிண்டல் செய்து விஜய் டி.வி. அது இது எது நிகழ்ச்சியில் கிண்டல் அடித்தது. இதனால் கோபமடைந்து, அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என லட்சுமி ராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் வரை சென்று புகார் கொடுத்தார். அது மட்டுமல்ல நல்ல நோக்கத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையை இப்போது ஒருவரை ஒருவர் கிண்டலடிக்க பயன்படுத்துகிறார்களே என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனைப்பட்டார்.
இதை எல்லாம் விட ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திக்கேயன் ‘ என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?… என்று பாட்டாக பாடினார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை இது விஜய் டிவியில் இருந்து எடுத்த வார்த்தை என்று சிவகார்த்திக்கேயன் கூறியதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கோபப்பட்டார்.

இனிமேல் யாரும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்று கேட்காதீர்கள் என்றும் சில வாரங்களுக்கு முன்பு வெளிப்படையாகவே கூறியிருந்தார். தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனின் வார்த்தையை திமுக காப்பி அடித்து தனது விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளது. இப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன செய்யப் போகிறார்?!!

No comments

Powered by Blogger.