யோஷித்த ராஜபக்ஷவின் கைது, சட்டப்படியே இடம்பெற்றது - கபீர் ஹாசிம்
அரசியல் பழிவாங்கல் இல்லை : ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம்
சட்டம் தன் கடமையைச் செய்யும். அரசாங்கம் ஒருபோதும் சட்டத்தில் தலையிடாது. யோஷித்த ராஜபக்ஷவின் கைது சட்டப்படியே இடம்பெற்றது.
இதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், பொது நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஷீம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
யோஷித்த ராஜபக்ஷ சட்டரீதியாகவே விசாரிக்கப்பட்டு சட்டத்தின் இறையாண்மையின் பிரகாரமே கைது செய்யப்பட்டுள்ளார். இதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் கிடையாது. அதேவேளை பழிவாங்கல் எண்ணமும் இல்லை.
நாட்டில் கடந்த காலங்களில் சட்டம் அமுலில் இருக்கவில்லை. இன்று நல்லாட்சியில் சட்டம் அமுலில் உள்ளது. எனவே சட்டம் தன் கடமையைச் செய்கிறது. அரசாங்கம் இதில் தலையிடுவதில்லை.
ஊழல் மோசடிக்காரர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை முடிவடைந்ததும் பொலிஸார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள். எனவே எப்போது கைது செய்யப்படுவார்கள்.
விசாரணைகள் எப்போது முடியும் என்ற நிகழ்ச்சி நிரல் எம்மிடம் இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.
Post a Comment