இஸ்லாத்தில் இல்லாத சீதனம், முஸ்லிம் பிரதேசங்களில் தலை விரித்தாடுகிறது - அபூபக்கர் மதனி
(பி.எம்.எம்.எ.காதர்)
சீதனம் பெறுவதன் மூலம் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதைப் பற்றி ஒவ்வொரு இளைஞனும் சிந்தி;க்க வேண்டும்.சீதனம் பெறுவதன் மூலம் சொகுசாக வாழலாம் என்ற சிந்தனை வந்தனால் தொழில் செய்யாமல் சொம்பறிகளாக இன்று இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் இந்த நிலை சமூதாயத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என அன்ஸாரிஸ் சுன்னத்தில் முகம்மதியாவின் பணிப்பாளர் அஷ்செய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்திக் மதனி தெரிவித்தார்.
றாபிதது அஹ்லிஸ் ஸூசுன்னா அமைப்பின் அம்பாறைப் பிராந்தியக் கிளை ஏற்பாடு செய்திருந்த அம்பாறைப் பிராந்திய 'ஈமானிய எழுச்சி மாநாடு மருதமுனை பெரிய நீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் கநடைபெற்றது இதில் 'சீதனமும் அதனை ஒழிப்பதற்கான வழிமுறையும்'என்ற தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
றாபிதது அஹ்லிஸ் ஸூசுன்னா அமைப்பின் அம்பாறைப் பிராந்தியச் செயலாளர் அஷ்;செய்க் எம்.எச்.றியாழ் காஸிமி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இங்கு அஷ்செய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்திக் மதனி தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது :- இளைஞர்கள் நல்ல முறையில் பணம் சம்பாதிப்பதற்கும் நல்ல இலக்கை அடைவதற்கும் முயற்சிக்காமல் சோம்பேறிகளாக வாழ்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.
சீதனம் என்பது இஸ்லாத்தில் இல்லை அது ஏனைய சமையத்தவர்களின் பழக்க வழக்கமாகும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இஸ்லாம் சொல்கின்றது ஆண்கள் பெண்களை பராமரிக்கக்கூடிய ஆற்றல் கொடுக்கப்பட்டவர்கள் ஆண்கள் திருமணம் முடிக்கின்ற போது பெண்களுக்குரிய மஹரை சந்தோஸமா மனத்திருப்தியோடு கொடுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.இதுதான் இஸ்லாம் கூறுகின்ற வழிமுறையாகும்.
பெண்களிடம் சீதனம் வாங்குவது கேவலமான அசிங்கமான பழக்கம் பலவீனமான பெண்களிடத்தில் இருந்து அவளுடைய கற்பை அல்லாஹ்வுடைய பேயரைக் கொண்டு உங்ளுக்கு ஹலாலாக்கிக் கொண்டீர்கள் எனவே ஹலாலாக்கிக் கொண்ட அந்தக் கற்புக்குச் சொந்தமான பெண்களை பராமரிப்பதும்,அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதும் ஆண்களுடைய பொறுப்பும் கடமையுமாகும்.அவன்தான் முதுகெழும்புள்ள ஆனாக இருப்பான்.
வசதி இல்லையென்று எந்த இளைஞனும் ஒதுங்கிவிட முடியாது இருக்கின்ற வசதிக்கேற்ப வாழலாம் என்று நினைத்தால் ஒவ்வொரு இளைஞனும் மஹர் கொடுத்து திருமணம் முடித்து தன் மனைவியை சந்தோஸமாக வாழ வைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது இதை ஒவ்வொரு இளைஞனும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையிலே பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களிலே இந்த சீதனக் கொடுமை இருந்தாலும் கிழக்கு மாகாணத்திலே சீதனம் தலைவிரித்தாடுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியர்கள்,டாக்டர்கள், பொறியிலாளர்கள்,பணக்காரர்கள்; போன்றவர்கள் சீதனம் வாங்குகிறார்கள் என்று அவ்வப்போது அறிந்து கொள்ள முடிகின்றது.எனவே இந்த சீதனக் கொடுமை முஸ்லிம் சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கப்ட வேண்டும் என்றார்.
இந்த 'ஈமானிய எழுச்சி மாநாட்டிலே' றாபிதது அஹ்லிஸ் ஸூசுன்னா அமைப்பின் தலைவரும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சுதேச மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான டொக்டர் அஷ்செய்க் ரயிஸூத்தீன் 'அல்-குர்ஆனையும்,அல்-ஹதீஸையும் புரிந்து கொள்வது எப்படி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் மருதமுனை தாருல் ஹூதா பெண்கள் அறபுக் கல்லூரி அதிபர் கலாநிதி அஷ்;செய்க் எம்.எல்.மபாறக் மதனி 'இமானிய எழுச்சி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இவர்களுடன் மருதமுனை தாருல் ஹூதா பெண்கள் அறபுக் கல்லூரி விரிவரையாளர் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி 'இல்லற வாழ்வு நல்லறமாக அமைய'என்ற தலைப்பிலும்,அஷ்செய்க் எஸ்.எம்.மன்சூர் மதனி 'தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தௌஹீத் கலிமா'என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இந்த மாநாட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்;பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பித்தக்கது.
Not only our men demand money (dowry) , after taking it, they
ReplyDeletealso ill-treat their wives in so many ways . What a disgraceful
people ! If they only believe that women are also human beings,
they can't treat their fellow beings the way they do now. They
must be sent to FCID for asking money to marry girls ! But
when they open their mouths , all are very pious souls , five
times praying , going UMRA a dozen times , Haj another dozen
times , endless good deeds . My foot!
Thank you for the title...and awareness...
ReplyDeleteHowever, please check with your own Jama'ath people specially in Ampara district....
Almost 99% of your own Jama'ath people took well constructed home from the girls.....then how....?
Not Shame.....????????
வெலிநாட்டுப் பணத்தில் பிழைப்பு நடத்துபவர்கள் ஏன் இதுவரை இதுபற்றி மக்களுக்கு சொல்லவில்லை? எல்லாம் போலி வேசங்கள்!
ReplyDeleteஇஸ்லாத்தில் புகைபிடித்தல் இருக்கிறதா..? சினிமா நடிகர்களுக்கு குருட்டு விசிறியாக இருப்பது இருக்கிறதா.. ? திருட்டு கரண்ட் இருக்கிறதா..? போக்குவரத்து பொலீசுக்கு இலஞ்சம் கொடுப்பது இருக்கிறதா..? அந்நியப் பெண்களை மோகிப்பது இருக்கின்றதா..? கொள்விலை பற்றி வாடிக்கையாளருக்கு கூறப்படாத வியாபாரம் இருக்கிறதா..? உலக வாழ்வில் அளவுக்கு மீறி துய்ப்பதுதான் இருக்கிகின்றதா..?
ReplyDeleteஆனால் இவற்றில் பெரும்பாலானவை 'இஸ்லாம் இஸ்லாம்' என்று கூக்குரலிடுபவர்களிடம் கூட தாராளமாய் இருக்கின்றதே..?