"ரணில் டபள் கேம்" டிலான் குற்றச்சாட்டு, ஞானசாரரை சிறைக்கு அனுப்பிய நீதிபதிக்கு பாராட்டு
ஆட்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரட்டைக் கொள்கையை கடைப்பிடிப்பதாக ராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
யோசித்த ராஜபக்ச கைதுசெய்யப்பட்ட விதம் குறித்தே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
சரி பிழை என்பவற்றுக்கு அப்பால் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை ஹாலி எலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா யோசித்த ராஜபக்ச விளக்கமறியல் தண்டனை கிடைத்துள்ளநிலையில் பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பிணையில் அனுமதிக்கப்பட்டனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கடவுச்சீட்டு முறைகேடு விடயத்தில் குமார் குணரட்ணம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் விமல் வீரவன்சவின் மனைவி பிணையில் வெளியில் உள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர் என்பதால் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஹிருனிக்காவுக்கு பிணைவழங்கப்பட்டதாகவும் திலான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை ஞானசார தேரரை விளக்கமறியலுக்கு அனுப்பிய ஹோமாகம நீதிவான் பாராட்டப்படவேண்டியவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment