Header Ads



-BBC-

துருக்கியின் எல்லைக்கு அருகே, இலட்சக்கணக்கான சிரிய அகதிகள் இடம்பெயர்ந்து வந்துள்ளமை, மனிதாபிமான நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன், அது மோசமடைவதாகவும் அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

அலெப்போ நகருக்கு அருகே, ரஷ்யா ஆதரவுடன் அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதலில் இருந்து சிரியர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

அவர்களை தமது நாட்டிற்குள் அனுமதிக்காத துருக்கி, அவர்களுக்கான உதவிகளை சிரிய எல்லைக்குள் அனுப்பி வைக்கிறது.

அதேவேளை, சிரியாவில் போர் நிறுத்தம் ஒன்றிற்கு ஆதரவு வழங்க ஆயத்தமாகி வருவதாக, ரஷ்யா குறிப்புணர்த்தியுள்ளது என அமெரிக் வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.