இஸ்ரேலிய சிறையில் 92 நாட்களாக தொடர் உண்ணாவிரதம்
-Abusheik Muhammed-
பாலஸ்தீன பத்திரிக்கையாளர் , முஹம்மத் அல் குய்க் ,வயது 33.
இஸ்ரேலிய படைகளால் எந்த ஒரு வழக்குமின்றி தடுப்புக்காவலில்கைது செய்யப்பட்டவர் .
இஸ்ரேலிய காவல்துறை இழைக்கப்பட்ட அநீதம்,மற்றும் சிறைக் கொடுமைகளை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதல் முஹம்மத் அல் குய்க் தொடர் உண்ணா விரதம் இருந்து வருகின்றார் .
92 நாட்கள் தொடரும் இந்த உண்ணா விரதத்தில் அவருடைய உடல் நிலை சீர் கெட்ட நிலையை அடைந்து விட்டது . பார்வை கோளாறு , குறைந்த இதயத் துடிப்பு, பேச முடியாத நிலை தொடர்கின்றது .
சாவின் விளிம்பில் இருக்கும் பத்திரிக்கையாளர் , மீண்டு வந்தால் கூட உடல் நிலை அடைந்த பாதிப்பை விட்டு மீளுவது கடினம் என பாலஸ்தீன நாட்டின் சிறைவாசிகள் குழுக்களின் வழக்கறிஞர் ஹிபா மசல்ஹா தகவல் அளிக்கின்றார் .
முஹம்மத் அல் குய்க் மற்றும் தடுப்புக் காவலில் இருக்கும் 660 பாலஸ்தீன சிறைவாசிகள் மீதான இஸ்ரேலிய சிறைக் கைதை எதிர்த்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது .
உண்ணா விரதம் இருந்து இறப்பதால் இஸ்ரேலிய தரப்பிற்கு எந்ததோல்வியும் இல்லை என இஸ்ரேலியர்கள் உறுதியாக நம்பும் போக்கினை பாலஸ்தீன சிறைவாசிகள் சங்கத்தின் தலைமை எச்சரித்துள்ளது.
பெரும்பான்மையான பாலஸ்தீன சிறைவாசிகள் இஸ்ரேலிய சிறைகளில் அதிகார வர்க்கத்தை எதிர்த்து உண்ணா விரதம் மேற்கொண்டு வருகின்றனர் ,காதர் அத்னன், முஹம்மது ஆலன் போன்றோர் கடந்த வருடம் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து இறுதியில் இஸ்ரேலிய படைகளால் விடுவிக்கப்பட்டனர் .
சர்வதேச ஊடகங்கள் முஹம்மத் அல் குய்க் உண்ணா விரதம் மீதான கவனத்தை திருப்புவதும் , இஸ்ரேலிய எதிர்ப்பை பதிவு செய்வதும் தார்மீக கடமையாக இருக்கின்றது .
Post a Comment