கொழும்பில் 900 ஏக்கரில் 68.000 சட்டவிரோத குடியிருப்புக்கள்
கொழும்பு மாவட்டத்தில் 900 ஏக்கர் நிலப்பரப்பில் 68 ஆயிரம் குடும்பங்கள் சட்டவிரோதமாக குடியிருப்பதாக அடையாளங்காணப்பட்டுள்ளது. இவர்களை வேறு இடங்களில் குடியேற்ற வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டிருப்பதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பு தொட்டலங்க பேர்கியூசன் தோட்டத்திலுள்ளவர்களுக்கு ஜனவரி 12 ஆம் திகதி வேறு இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன.எனினும் அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு ஜனவரி 31 வரை காலக்ெகடு விதிக்கப்பட்டிருந்த நிலையிலே சிலர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொட்டலங்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
கொழும்பு நகரிலுள்ள குடிசைவாசிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது.பேர்கியூசன் தோட்டத்திலுள்ள 35 பேர் தவிர சகலருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு வாடகைக்கு வீடு தேடிக்ெகாள்ளும் வரை சிலகாலம் தங்கியிருக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொட்டலங்க குடிசை வாசிகளுக்கு அரசாங்கம் எந்த வித அநீதியும் செய்யவில்லை. ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆலோசனைப்படி சகல மக்களுக்கும் நியாயமான முறையில் வீட்டுரிமை வழங்க நடவடிக்ைக எடுத்து வருகிறோம்.
இங்குள்ள 262 குடும்பங்களுக்கு இரண்டு கட்டங்களில் வீடு வழங்கப்பட்டன. ஆனால் இவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் சட்டவிரோதமாக இங்குள்ள காணிகளை சுவீகரித்து வந்துள்ளனர். அதனாலே எமக்கு இந்த முடிவை எடுக்க நேரிட்டது. நாம் யாரையும் பலாத்காரமாக வௌியேற்றவில்லை.
இவர்கள் வீதியை மறித்து போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. ஊடகங்களுக்கு முன்பாக வந்துகோசம் போட்ட சிலருக்கு 2 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் தான் ஊடகங்கள் முன்பாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.
சிலர் தமக்கு வழங்கிய வீடுகளை வாடகைக்கு வழங்கியுள்ளனர். கொலன்னாவ எண்ணெய் குழாய் மார்க்கத்தின் மேல் குடியிருக்கும் வீடுகளை அகற்றுவதற்கு இந்த பேர்கியூசன்ஸ் தோட்டத்திலே தற்காலிக வீடுகளை வழங்க வேண்டியுள்ளது. இங்கு 2 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.
கொலன்னாவையில் சட்டவிரோத குடியிருப்பாளர்ளுக்கு அரசாங்கம் 35 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை வழங்கியுள்ளது. தமது வீடுகளை வேறு நபர்களுக்கு வாடகைக்கு வழங்கியவர்களின் வீடுகளை அரசாங்கம் மீளம் பெறும்
அரச காணிகளை பலாத்காரமாக சுவீகரிக்க எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது.எதிர்காலத்தில் குடிசைகளுக்குப் பதிலாக 5 இலட்சம் வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்க இருக்கிறது என்றார்.
-ஷம்ஸ் பாஹிம்-
Post a Comment