சவூதி அரேபியாவில் பயங்கரவாதம், 9 அமெரிக்கர்கள் கைது
சவூதி அரேபியாவில் பயங்கரவாதம் தொடர்பாக 9 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்திகள் தெரிவிப்பதாவது:
சவூதி அரேபியாவில் கடந்த ஒரு வார காலத்தில், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 9 பேர் அமெரிக்கர்கள்.
கடந்த மாதம் 25-ஆம் தேதி 4 அமெரிக்கர்களும், அதனைத் தொடர்ந்து கடந்த 4 நாள்களில் 5 அமெரிக்கர்களும் சவூதி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சவூதி அரேபியாவில் பல அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள குடிமக்களின் நலன்களைக் காக்க அமெரிக்க வெளியுறவுத் துறை முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பிட்ட நபர்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், இதுகுறித்து மேற்கொண்டு விவரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று கூறினர்.
சவூதி அரேபியா, அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
Remember the Farewell sermon of the Prophet Muhammed.
ReplyDeleteI wish it will be considered strictly in all the issues.