இலங்கையில் இன்று 7 பேருக்கு மரண தண்டனை
1989ஆம் ஆண்டு ஜே.வி.பி வன்முறைகள் இடம்பெற்ற காலத்தில் நபர் ஒருவரை படுகொலை செய்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று 08-02-2016 விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே தங்காலை உயர் நீதிமன்ற நீதவான் சுஜாதா அலகப்பெரும குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
1989ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜே.வி.பி கலவரத்தின் போது சினிமோதர கடல் வீதியில் வசித்து வந்த எல்.எம். அன்ட்ரியன்ஹாமி என்ற 68 வயதான நபர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி, அன்ட்ரியன்ஹாமி என்பவரை குழுவொன்று கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது சந்கேத நபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
இதேவேளை, ரத்துபதுகே வில்சன், ஆர்.என். பிரியந்த, விமலசேன, பிரதீப் பிரியந்த, பிரயந்த, ராஹல மற்றும் சரத் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment