Header Ads



72 ஆவது பிறந்ததினத்தை 72 அடி கேக் தயாரித்து, படுவிமர்சையாக கொண்டாடிய அப்துர் ரவுப் (படங்கள்)

இலங்கை - காத்தான்குடியைச் சேர்ந்த   அப்துர்  ரவுப் அவரது 72 பிறந்ததினத்தை 72 அடி கேக்கை தயாரித்து படு விமர்சையாக கொண்டாடி உள்ளார்.

முக்கிய குறிப்பு

இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான வஹ்ததுல் வுஜூத் கொள்கையை மீண்டும் மௌலவி அப்துர் ரவுப் பரப்பிவருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும்  காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும், காத்தான்குடி பள்ளிவால்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் என்பன இணைந்து     வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் காத்தான்குடியிலுள்ள சகல பள்ளிவாயல்களிலும் இந்த அறிவித்தல் வாசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது. 

1979ம் ஆண்டு நமதூரைச் சேர்ந்த மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்களால் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான வஹ்ததுல் வுஜூத் எல்லாம்  அவனே என்ற கொள்ளை தொடர்பான விவகாரத்தினை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு ,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ,முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சு,காத்தான் குடி ஜம்இய்யதுல் உலமா , காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், உள்ளுர் மற்றும் தேசிய ரீதியான கல்விமான்கள்,தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் பல்வேறு கலந்துரையாடல்கள், மாநாடுகள், உடன்படிக்கைகள் போன்ற விடயங்கள் நடைபெற்றதை பொது மக்களாகிய தாங்கள் நன்கறிவீர்கள்.

இந்த வகையில் இறுதியாக கடந்த 2007-08-30ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும், மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வஹ்ததுல் வுஜூத் கொள்கையை விட்டு நீங்கிக் கொள்வதாக அவருடன்  உடன்பாடு காணப்பட்டது.

அதில் மௌலவி அப்துர் ரஊப் தான் கொண்டிருக்கும் எல்லாம் அவனே என்ற கொள்கை பிழையானது என்றும் இதன் பின்னர் வஹ்ததுல் வுஜூத்  கொள்கையை எண்ணத்தாலோ,சொல்லாலோ,செயலாலோ,கொள்கையாக ஆக்கிக் கொள்ள மாட்டேன் என்றும் உடன்படிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2007ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு அவர் வழங்கி இருந்த எழுத்து மூலமான உடன்படிக்கையை மீறும் வகையில் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி மேற்படி கொள்கை சம்மந்தமாக அண்மைக்காலமாக ஆற்றிவரும் உரைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது.

இவ்விடயத்தினை அகில இலங்கை ஜமஇய்யதுல் உலமாவின் கவனத்திற்கு தகுந்த ஆதாரங்களுடன் கொண்டு சென்ற போது ,அவற்றைப் பரிசீலித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இவ்விடயம் தொடர்பில் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களையும் அவரது தரப்பினரையும் அழைத்து பேசி தீர்வு காண்பதென கூறியுள்ளது.

எனவே நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு பொது மக்கள் பொறுப்புணர்வுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என அவ் அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



15 comments:

  1. Ya Allah give to Hidayath for this people.

    ReplyDelete
  2. காடு ( மண்ணறை ) வா வா என்கிறது
    வீடு போ போ என்கிறது.கிழட்டுப்பருவத்திலும் என்ன உனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.அதுவும் இறைவனின் மாளிகைக்குள்.கொஞ்சமாமவது இறையச்சம் இருக்கிறதா? மனச் சாட்சி செத்துவிட்டதா? அதிகம் அதிகம் நல்லமல்கள் செய்து இறைவனிடம் நெருங்கவேண்டிய பருவமும் காலமும் ஏன் இன்னும் அந்நியர்களை பின்பற்றிக்கொண்டிருக்கிரீகள்? தயவு புனித இஸ்லாத்தை அசிங்கப்படுத்தாதீர்கள்.

    ReplyDelete
  3. More than him we have to worry about the followers. It's hard to believe these type people exists in Sri Lanka that also in a Muslim majority town.

    ReplyDelete
  4. இது ஏதோ ஒரு Western Style கொண்டாட்டம் போல தெரிகிறது!

    ReplyDelete
  5. இவர்தான் கண்முன் தெரியும் செய்தான் இவரைப்பற்றி பேசி எந்த பிரயோசனமும் இல்லை.எதுவல்லாம் குர்ஆணுக்கும் ஹதீஸுக்கும் எதிராக இருக்கிறதோ அதை எல்லாம் செரி என்று சொல்லி மக்களை வழி கெடுக்கும் செய்தான்களை கண்டு கொள்ளவேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை.

    ReplyDelete
  6. காத்தான்குடியில் அத்வைத கொள்கைகளில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதால் மக்களை கவர்வதற்காக இவர்கள் புதிது புதிதாக ஏதாவது ஒன்றை செய்து வருகின்றார்கள் .

    ReplyDelete
  7. அடுத்த 70 அடி அவுலியாவின் கேக் ஜியராம் நவுது பில்லா

    ReplyDelete
  8. Celebrating BIRTH DAY was 1st introduced to the World by EGYPT FEROW ( FIRAWN ), who was in complete opposition to the belief in ONE GOD. That is why he tried to kill MOSA (al).

    EVEN practicing CHRISTIAN people do not celebrated BIRTH DAY for this reason.

    SEE how so called Mulsims Following the Manhaj (way ) of FIRAWN.

    May Allah protect us from the people of SHIRK and BIDA. We wish they turned to the religion of Allah.

    ReplyDelete
  9. People always criticize something on which they have no knowledge. Everybody knows that his theory of Wahdathul wujoodh is not easily digestible.However, I do not see anybody go directly to him and ask to explain why he is doing this. And I doubt that the writer of this article has proof of Mowlavi Abdur Rauf's acceptance to renounce the theory when he had discussion with ACJU in 2007.

    ReplyDelete
  10. ஒன்றுமில்லை சகோதரர்களே.. செய்தான் யாரை எந்த நேரத்திலும் எப்படியான சந்தர்ப்பத்திலும் கெடுப்பதற்கே அலைந்து திறிவான் காரனம் அவன் அல்லாஹ்விடம் விட்ட சபதம் அதுவே அவ்வாரே மார்க்க கல்வியை நல்லமுறையில் கற்றுள்ள இவரையும் மௌத்தாகும் வயதில் குழப்புவதற்காக 72 அடி நீளத்தில் புகுந்து குழப்பிவிட்டான் அல்லாஹ் இவரது ஈமானை பாதுகாத்து நல்ல முரையினில் மரணிக்கச்செய்யவேண்டும் ஆமீன்...

    ReplyDelete
  11. Regarding birthday celebration, what a Muslim can learn from it? If we answer this question it's bring fear and consern,about him regarding the closenes to his grave. But people joy about a passing a year in his life.

    ReplyDelete
  12. ஒரு முர்தத்தை ஜம்யதுல் உலமாவே மௌலவி,மிஸ்பாஹி என்று கண்ணியப் படுத்தி கூறும் போது அடுத்த பிறந்தநாளுக்கு 73 அடி கேக் வெட்டி விமர்சையாக கொண்டாடினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.முர்த்தத் பட்டமும் கொடுத்து மௌலவி மிஸ்பாகி என்றும் சொல்லி எங்களை குழப்பாமல் 1) முர்த்தத் என்று சொல்லுங்கள் நாங்கள் அவனை விட்டு விழகி நடக்கிறோம்,அல்லது மௌலவி மிஸ்பாகி என்று சொல்லுங்கள் அவருடன் சேர்ந்து பைலா,டிஸ்கோ,ஆடுகிறோம்.

    ReplyDelete
  13. "There was not a cake of 72 feet here. It is a white cloth with 72 number flower decorations "

    Whether celebrating birthday is write or wrong is different issue. But the Wahhabi supporters have gone so low in ethics to say utter lies to the public to make their case stronger ?

    Jaffna Muslim - Please wake up. Do not put something without veryfing the facts. Otherwise the credibility of your news will be ....................

    ReplyDelete
  14. Intha KAYAL ku Eiman than ithayattil earuthilla Kannuma teriyala..? Adey POIYYANE...Un kannai urutti urutti paar...Kekka illa vella podavaya...Muthalla nee tirunthuda...vella aasaamiye...

    ReplyDelete

Powered by Blogger.