'விஷமில்லாத நாடு' 6ஆம் திகதி ஆரம்பம்
'விஷமில்லாத நாடு' நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்று ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஞ்ஞாபனத்துக்கமைய 3 வருடங்களில் நாட்டில் விஷமில்லா விவசாயத்தை அறிமுகப்படுத்துதலுக்கான 'விஷமில்லா நாடு திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி செயலாளர் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (16) நடைபெற்றபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் ஆறாம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை காலை 10.00 மணி தொடக்கம் இரவு 9.00 மூன்று தினங்களுக்கு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் நிமித்தம் மார்ச் மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் சங்கம் மற்றும் விவசாயத்துறை சார் பிரதிநிதிகள் 5000 பேர் வரை கலந்துகொள்ளும் விஷமில்லா நாடு திட்டத்தை அறிமுகப்படுத்தும் மாநாடும் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர், அமை்சசர்களான துமிந்த திஸாநாயக்க, சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, மற்றும் இராணுவத்தளபதி, இலங்கை விமானப்படை பிரதானி, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹன திஸாநாயக்க, மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
P B Jayasundara???
ReplyDelete