Header Ads



யோஷிதவுக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்கள், பணச்சலவை தொடர்பிலும் புதிய வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் ஐவருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்களின் கீழ், வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பணச் சலவைக் குற்றத்தில் ஈடுபட்டமை, போலி ஆவணங்கள் தயாரித்தமை, நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டமை, சுங்கச் சட்டத்தை மீறியமை, நிறுவன சட்டங்களை மீறியமை மற்றும் தவறான நிதி கையாளுகை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

யோசித ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை  குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுமார் 234 மில்லியன் ரூபாய்களுக்கான நிதி மூலங்களை உரியமுறையில் காட்டாமை மற்றும் அரச சொத்துக்களை பயன்படுத்தியமை உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சீஎஸ்என் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து 2.3 மில்லியன் ரூபாய்கள் அனுப்பப்பட்ட ஆதாரம் குறித்தும் உரிய தகவல் வழங்கப்படவில்லை.

எனவே பணச்சலவைக்கான உரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், இது தொடர்பில் பெண் பணிப்பாளரும் கைது செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.