Header Ads



நீதிபதி ரங்க திசாநாயக்காவின் அதிரடி தொடருகிறது - 6 பிக்குகளுக்கு 1ம் திகதிவரை மறியல்

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதுடன் நீதிமன்றத்தை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 11பேரையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.

ராவணா பலய அமைப்பின் அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், முன்னாள் எம்.பியான ஹக்மீமன தயாரத்ன தேரர்கள் உள்ளிட்டோர், கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமையன்று பொலிஸில் சரணடைந்தனர். அனைவரும், நேற்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னரே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11பேரில் ஐவர், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.