Header Ads



ரவிராஜ் கொலைக்கு கருணா குழுவுக்கு 50 மில்லியன் கொடுத்த கோத்தா – நீதிமன்றில் சாட்சியம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜைப் படுகொலை செய்வதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச 50 மில்லியன் ரூபாவை கருணா குழுவுக்கு வழங்கியிருந்தார் என்று சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ரவிராஜ் கொலை வழக்கில் நேற்றுமுன்தினம் சாட்சியம் அளித்த, சிறிலங்கா காவல்துறையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த, லியனாராச்சி அபேரத்ன என்ற காவலரே இந்த தகவலை வெளியிட்டார்.

“ரவிராஜ் கொலை தொடர்பாக  கோத்தாபய ராஜபக்ச அறிந்திருந்தார். அவரே அதற்காக 50 மில்லியன் ரூபாவை கருணா குழுவுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

நான், 2005இல் தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர் கருணா குழுவினருடன் தொடர்பு வைத்திருந்தேன்.

சில கடற்படையினர்  கருணா குழு உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தியதை அறிந்திருந்தேன். அவர்களே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.” என்றும் அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

இந்த வழக்கு மீண்டும் மார்ச் 02ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.