Header Ads



காதலில் தோல்வியடைந்த 50 வயது, ஆசிரியரின் பரிதாபம் - கைகொடுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி (படங்கள்)

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பிரதிப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் இணைந்து காதல் தோல்வியால் மனநிலை பாதிக்கப்பட்டு வீதியில் தனித்திருந்த நபரை மீட்டுள்ளனர்.

பிரதிப் பொறுப்பதிகாரி பணிக்கு செல்லும் போது வீதியோரத்தில் அழுக்கான ஆடையுடன் காணப்பட்ட ஒருவரை சந்தித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட சக அதிகாரிகளை தன்னுடன் அழைத்து சென்று அந்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சுத்தப்படுத்தி, தலைமுறை, தாடி, நகம் ஆகியவற்றை வெட்டி, புதிய ஆடையை அணிவித்து உணவு வழங்கியுள்ளார்.

பொலிஸார் உதவிய இந்த நபரின் பெயர் சுசில் புஷ்பகுமார, 50 வயதான இந்த நபர் ஆசிரியராக பணிப்புரிந்துள்ளார்.

யுவதி ஒருவரை காதலித்துள்ள புஷ்பகுமாரவை பெண் வீட்டார் விரும்பவில்லை. இதனால், காதலித்த பெண்ணை இவரால் மணமுடிக்க முடியவில்லை. இதன் பின்னரே புஷ்பகுமார இந்த நிலைமைக்கு சென்றுள்ளார்.

காதலித்த நேரத்தில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புஷ்பகுமார வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது தாய் கூறியுள்ளார். இவரை இன்று 03.01.2016 வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.


9 comments:

  1. I sincerely salute you sir,

    ReplyDelete
  2. பதவி.பட்டங்கள்.மதம்.எல்லாமே இந்தக்காதல் எனும் சொல்லுக்குல் அகப்பட்டு சின்னாபின்னமாகும் இதற்கு எவராலும் மருந்துகள் கூடகண்டுபிடிக்க முடியாது அவ்வாறான நிலைக்கு ஆலாக்கிய அந்த மங்கை இதைப்பார்த்த பின்னாவது ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினால் அதுவே காதலுக்கு மரியாதை....

    ReplyDelete
  3. Enter your comment...good humanity police officer

    ReplyDelete
  4. Great work. We salute you all. We hope lot from police like these

    ReplyDelete
  5. சிறந்த பொலிஸ் அதிகாரி பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. தனது கடமைக்கும் அப்பால் சென்று, இந்தக் காவல் துறை அதிகாரி செய்த மனித நேயப்பணி என்றுமே பாராட்டத் தக்கது!

    ReplyDelete
  7. அறுசுவை அமுதமே அளவு கடந்ததும் விஷமாகும்போது காதல், ஆசை,அதிகாரவெறி, பக்தி..etc விதிவிலக்காகி விட முடியுமா என்ன..?

    ReplyDelete

Powered by Blogger.