Header Ads



ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் விடுதலை


எகிப்தில்  4 வயது சிறுவனுக்கு, கொலைக்குற்றச்சாட்டுக்காக, ஆயுட் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, தவறாக நடந்த ஒன்று என்று எகிப்திய அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு நடந்த மோசமான வன்செயல்களில் ஈடுபட்டதாக நூற்று பதினைந்து பேருடன் சேர்த்து இந்த குழந்தையின் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி தலைமையிலான ஆட்சியின் நீதி முறைமை குறித்து இது மேலும் விமர்சனங்களை குவித்திருந்தது.

No comments

Powered by Blogger.