நாடுபூராக 4 மணித்தியால மின்சார தடை - அறிக்கை கோரும் பிரதமர்
இலங்கையில் இன்று சுமார் 4 மணித்தியாலங்களாக மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சக்தித்துறை அமைச்சுக்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் நாடளாவிய ரீதியில் சுமார் மூன்று மணித்தியால மின்சார தடை ஏற்பட்டிருந்தது.
எனினும் அதற்கு தொழில்நுட்ப பிரச்சினையே காரணம் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில் இன்றைய சம்பவம் தொடர்பில் ஆராய இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுரேன் பட்டகொட மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment