4 பிக்குகளும் ஒரே நேரத்தில் சுகவீனம் - சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
ஹோமாகம நீதிமன்ற வளவில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நான்கு பிக்குகளும் ஒரே நேரத்தில் சுகவீனமுற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சிஹல ராவய மற்றும் இராவணாபலய இயக்கங்களைச் சேர்ந்த கிரம தேவிந்த, பியகம சுசில, பிட்டிகல தம்மவினீத, மதவாகல தம்மசார ஆகிய நான்கு பிக்குகளுமே ஒரே நேரத்தில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட அவர்கள் நால்வரும் குறிப்பிட்ட வைத்திய அதிகாரி ஒருவரின் பரிந்துரையின்படி சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் எனவும், நால்வரும் ஒரே நேரத்தில் சுகவீனமுற்றது விசித்திரமாகத் தோன்றுவதாகவும் சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது பிணையில் விடுதலையாகியுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிகிச்சை பெற்று வந்த அதே மூன்றாம் இலக்க வார்டிலேயே இவர்கள் நால்வரும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொய் சொல்லுவது இவர்களுக்கு "பbன" ஓடுவது போல! பொய், ஏமாத்து , பித்தலாட்டங்களை எல்லாம் அத்துப்பிடி!!!
ReplyDeleteஇவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்பவர்களின் நிலைதான் பரிதாபம்.
அடப்பாவிங்களா! நீங்களுமா..?
ReplyDeleteVoiceSriLanka, நாம் நினைத்தோம் நீங்கள் எழுதிவிட்டீர்கள். நன்றி
ReplyDeleteஇவனுகளுக்கு ஒன்றும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன்.ஏனென்றால், இவனுகளுக்கு தான் ரோசம் இல்லை நமக்குமா இல்லை.voice srilanka சொல்வதைப்பார்த்தால் சிருப்புத்தான் வருது.காலில் விலுபவான் மட்டும் பாவம் இல்லை இவர்களும் மகா பாவம் உள்ள இருக்கவும் முடியல்ல வெளிய போகவும் முடியல்ல அதனால் பbன ஓதிட்டு இருக்க வேண்டியதுதான் .பாவம்.இன்னும் எவ்வலவோ எழுதலாம் நம்மதம் அனுமதிக்காது .
ReplyDelete