ஹோமாகம நீதிமன்றத்தில் பரபரப்பு, ஞானசாரர் ஆஜர், 4 பிக்குகளுக்கு அடையாள அணிவகுப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று /16/ நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் கடந்த 9ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட போதும், சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2
ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும்,நீர் நிரப்பப்பட்ட பௌசர் வாகனம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய தினம் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 4 பிக்குமாறும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த இருப்பதாலேயே இங்கு பாதுபாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment