குழப்பத்தை ஏற்படுத்திய 4 பிக்குகள் இன்று சரணடைந்தனர்
நீதிமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நான்கு பிக்குகள் இன்று -15- ஹோமாகம பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
இராவணா பலய அமைப்பைச் சேர்ந்த இத்தேகந்த சத்தாதிஸ்ஸ, சிஹல ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன உள்ளிட்ட நான்கு தேரர்களே இவ்வாறு சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனயைடுத்து காவி உடை அணிந்த பலர் நீதிமன்ற வாளாகத்தின் முன் குழப்பநிலையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.
ஞானசார தேரரை விளக்கமறியலில் வைப்பின் தம்மையும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தின் முன் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிக்குகளை கைதுசெய்யுமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக சில பிக்குகள் இவ்வாறு சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment