Header Ads



ஜான்சன் பொருள்களை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் - 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு


அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் ஏற்பட்ட கருப்பை புற்றுநோயால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 492 கோடி  இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்தவர்  ஜேக்கி ஃபாக்ஸ். இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஃபாக்ஸ் அண்மையில் இறந்தார்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே ஃபாக்ஸுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டது என கூறி, அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஃபாக்ஸூக்கு 73 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 292 கோடி) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர்களில் 'டால்கம்' பயன்படுத்தப்படுகிறது. இந்த டால்கம் பொருளால் புற்றுநோய் ஏற்படுகிறது என தெரியவந்ததையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. எனினும், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து டால்கமை பயன்படுத்தி வந்துள்ளது.

No comments

Powered by Blogger.