Header Ads



சுதந்திரக் கட்சியில் மிகப்பெரும் வெட்டு, 450 பேர் அவுட்..?


450 உள்ளுராட்சி மன்ற பிரதானிகள் அல்லது முக்கிய பதவிகளை வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்க நேரிடலாம் என சிங்கள வார இறுதி பத்திரிகையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களில் முக்கிய பதவி வகிக்கும் கட்சியின் 450 உறுப்பினர்களுக்கு இம்முறை தேர்தலின் போது வேட்பு மனு வழங்கப்படாது என கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதி மோசடி, ஊழல்கள், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வேட்பு மனு வழங்கப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், லஞ்ச ஊழல் மோசடி, நிதி மோசடி, கொலை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

குற்றச்சாட்டுக்கள் தேர்தலுக்கு முன்னதாக விசாரணை செய்து முடிக்கப்பட உள்ளது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் எந்தவொரு உறுப்பினருக்கும் சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலோ வேட்பு மனு வழங்கப்படாது என சிங்கள வார இறுதி பத்திரிகையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.