Header Ads



4283 மில்லியன் செலவில் கிரிக்கெட் மைதானம், 10.000 ரூபா கட்டணத்தில் திருமணத்திற்கு விடப்படுகிறது

சூரியவெவவில் 4283 மில்லியன் ரூபா செலவில் கடந்த ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு மைதானம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத நிலையில் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்பட்டு திருமண வைபவங்களுக்கு வழங்கப்படுவதாக  (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி பதிலின்போது தெரியவந்தது.

விளையாட்டு அமைச்சரிடம் ஹேசா விதானகே எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விளையாட்டரங்கை முன்னேற்றும்வரை திருமண வைபவங்களுக்கு வழங்கி வருவதாக குறிப்பிட்டார். இம்மைதானத்தை விளையாட்டுத்துறை பயிற்சி நிலையமாக முன்னேற்றுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இவ்விளையாட்டரங்கை நிர்மாணித்தது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளபோதும் இதனை மூடிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், இதனை அபிவிருத்தி செய்வது பற்றி கிரிக்கெட் சபையுடன் பேசவிருப்பதாகவும் கூறினார்.

வாய்மொழி மூல விடைக்கான கேள்வியை எழுப்பிய ஹேசா விதானகே எம்பி, கூடுதல் நிதி செலவில் அமைக்கப்பட்ட இவ்விளையாட்டு மைதானம் திருமண வைபவங்களுக்காக 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படுகிறது. இதனை நிறுத்த நடவடிக்கை எடுப்பீர்களாக எனக் கேட்டார்.

4293 மில்லியன் ரூபா செலவில் இம்மைதானம் அமைக்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இங்கு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படாத போதும் 9 இருபதுக்கு இருபது போட்டிகளும், 11 ஒருநாள் போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டது தொடர்பில் பல்வேறு விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த மைதானத்திற்கு அருகில் ஹோட்டல்கள் எதுவும் கிடையாது.ஹோட்டலுக்கு 40 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இங்கு வருகைதந்த பிரதமர் இதனை சர்வதேச மட்டத்திலான பியற்சிகள் வழங்கும் நிலையமாக மாற்றுவது குறித்து யோசனை முன்வைத்துள்ளார். புதிய திட்டம் முன்னெடுக்கும் வரை திருமண வைபவங்களுக்காக இதனை 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கி கட்டணம் அறவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. So, base on 10,000 Rs. you have to get rent from 4,28,300 wedding ceremonies to collect the total expences..??? Appaada......when...????

    ReplyDelete

Powered by Blogger.