Header Ads



நாடு முழுவதும், சுமார் 40,000 போலி வைத்தியர்கள்

நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பொலிஸ் மாஅதிபரிடம் சமர்ப்பித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டார்.

போலி வைத்தியர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

போலி வைத்தியர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சட்ட மாஅதிபர் திணைக்களத்துடன் இணைந்து கடந்த சில வருடங்களாக முன்னெடுத்து வருவதாகவும் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

போலி வைத்தியர்கள் குறித்து பிரதேச மட்டத்தில் தமது சங்கத்திற்கு கிடைக்கும் தகவல்களை எழுத்துமூலம் பொலிஸ் மாஅதிபருக்கு சமர்ப்பித்து வருவதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மேல் மாகாணத்திலேயே போலி வைத்தியர்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

2 comments:

  1. Yes ,we read about this since very long and we get assurances
    that there's going to be raids to catch them . Nothing happens.
    It is the same about pharmacies . Pharmacies have certificates of pharmacists but no pharmacists inside ! It is like Srilankan
    "fish bun" without fish.

    ReplyDelete
  2. Also same like Beef Koththu without beef.

    ReplyDelete

Powered by Blogger.