4000 மில்லியன் ரூபா இழப்பு, அரசிற்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு - நாமல்
அரசாங்கத்துக்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் வடமேல் மாகாண உறுப்பினருமான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இம்முறைப்பாட்டை நாளை செவ்வாய்க்கிழமை செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல அமைப்புக்கள் இணைந்தே அரசாங்கத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாக தெரிவித்த அவர், பல அரிசி ஆலை உரிமையாளர்களின் நெற்பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்தமையினால் 4000 மில்லியன் ரூபா இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment