தன் இறப்பிலும் 4 பேரை வாழவைத்த சிறுவன்
மூளைச்சாவு அடைந்த வெளிநாட்டு வாழ் இந்திய சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர். இருதயம் 7 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது.
இது தொடர்பில் தெரியவருவது,
அவுஸ்திரேலியாவில் , சிட்டியினில் வசித்து வருபவர் உதய்னி. இவரது மனைவி மிலி. இவர்களுக்கு தியான் (வயது 7) என்ற மகனும், 9 வயது மகளும் உள்ளனர்.
இவர்களது சொந்த ஊர் மும்பையில் உள்ள அந்தேரி. இந்தநிலையில் கடந்த மாதம் உதய்னி குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார்.
பின்னர் கடந்த 22ஆம் திகதி மீண்டும் அவர் அவுஸ்திரேலியாவிற்கு கிளம்புவதற்கு இருந்துள்ளார்.
இந்நிலையில் 22ஆம் திகதி விமானம் புறப்பட2 மணிநேரம் இருந்த நிலையில் பயங்கரமாக தலை வலிப்பதாக கூறி தியான் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்துள்ளான். இதனால் பதறிப்போன பெற்றோர் தியானை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தியானுக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தியானை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவருக்கு கடந்த சனிக்கிழமையன்று மூளைச் சாவு ஏற்பட்டது.
இதையடுத்து தியானின் பெற்றோர் அவனது உடல் உறுப்புகளை தானம் அளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து மருத்துவர்கள் தியானின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
இதையடுத்து பொலிஸார் துணையுடன் இருதயம் 18 நிமிடங்களில் வேறொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்த இருதயம் மரணத்தின் விளம்பில் இருதயத்திற்காக காத்திருந்த மாதவி என்ற 7 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இதேபோல் தியானின் சிறுநீரகங்கள் 11 வயது மற்றும் 15 வயது சிறுவர்களுக்கும், கல்லீரல் 31 வயது வாலிபருக்கும் பொருத்தப்பட்டது. வெளிநாட்டு வாழ் இந்திய சிறுவனின் உடல் உறுப்பு தானம் மூலம் 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மிககுறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் தியான் ஆவார்.
இந்தநிலையில் சிறுவனின் தியானின் தாய் மிலி கூறும்போது:� ஒரு ஆண்டுக்கு முன்னதாக தான் உடல் உறுப்பு தானம் பற்றி பள்ளிக்கூடம் வழியாக என் பிள்ளைகள் தெரிந்து கொண்டனர். அப்போது தியான் வளர்ந்து பெரியவன் ஆன பிறகு உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என கூறினான். அவன் விருப்பப்படியே அவனது உறுப்புகளை தானம் செய்தோம். இந்திய பள்ளிகளிலும் உடல் உறுப்பு தானம் பற்றி பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மிலி கூறியுள்ளார்.

Post a Comment