துருக்கியில் இரசாயன காற்றை சுவாசித்த பெண் உயிரிழப்பு: 3 பேர் கவலைக்கிடம்
துருக்கியில் இரசாயன காற்றை சுவாசித்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு மாகாணத்தில்தான் இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்தேறியுள்ளது.
அங்குள்ள அப்சின் எனும் பகுதியில் குடியிருந்துவரும் 60 வயதான சலிகா தசன் என்பவரது வீட்டில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்துள்ளது.
கிருமிகளால் அதிக தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதை உணர்ந்துள்ள அந்த குடும்பம், சம்பவத்தன்று வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்துள்ளது.
இதனிடையே அதிகம் படிப்பறிவில்லாத அந்த 60 வயது தாய், அவர்களது வீட்டில் இருந்த ஏர்-கண்டிஷனரில் ரசாயன கலவையை தெளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமையலறை மற்றும் கழிவறையில் பயன்படுத்தும் அந்த ரசாயன கலவை கலந்த காற்றை சுவாசித்த குடும்ப உறுப்பினர்கள் வாந்தி மற்றும் மயக்கத்துடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 25 வயது Tuba Gurbuz சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வைத்தே உயிரிழந்துள்ளார்.
வயதான தாயார் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் சுயநினைவை இழந்த நிலையில் 4 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஆனால் 27 வயதான அவரது மருமகள் மட்டும் இன்னும் சுயநினைவுக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக குறித்த மாகாண பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment