Header Ads



இஸ்லாத்தின் வளர்ச்சி பற்றி ஆய்வு, மேற்கொள்ளப்பட்டபோது கிடைத்த அதிர்ச்சிகள்..!! பகுதி - 2

-Misnaaf-

அண்மையில் இலங்கையில் இஸ்லாத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இஸ்லாத்தில் இருந்து மதம் மாறியவர்கள் பற்றியும் தரவுகள் ஒன்றுதிரட்டப்பட்டது. கொழும்பு மட்டக்குழியில் கடந்த ஐந்த ஆண்டு காலமாக இஸ்லாத்தில் இருந்த கிட்டத்தட்ட 300 பேர் மதம் மாறியுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலும் கண்டறியப்பட்டது. இவர்களின் மதம் மாற்றத்திற்க்கு காரணம் என்ன? யார் இதற்கு பொறுப்புதாரிகள்?.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டுதானே எம் குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டும், உம்றாக்கள் செய்து கொண்டும், பெருநாட்கள் கொண்டாடிக்கொண்டும் இருக்கின்றோம். வறிய மக்களின் வீடுகளுக்கு சென்று பாருங்கள். உங்கள் அனைவருக்கும் அவர்களின் உண்மை நிலமை புரியும். எமது சமூகத்தில் வறிய மக்கள் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் யாரும் எதிர்பார்ப்பது போலன்றி அவர்களின் நிலமை. பல வருடங்கள் இவர்களின் நிலமைகளை கேட்டறிந்து, கண்களால் பார்த்த பின்னே, இந்த ஆக்கத்தையும், வறிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் உங்கள் அனைவரிடமும் முன்வைக்கின்றேன்.
சமூகத்தின் இந்த நிலமைக்கு பிரதான காரணம், எங்களுக்கு இறைவன் கொடுத்த பொருளாதாரம் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம், நாங்கள் ஏன் வறியவர்களுடன் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் செல்வந்தர்களும், நிர்வாகம் தெரியாத எமது தலைமத்துவமும், கிடைக்கப்பெறும் வருமானங்கள் அனைத்தையும் பள்ளிவாயல் கட்டிடங்களை புனர்நிர்மானம் செய்வதிலேயே கொட்டித்தீர்க்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் கல்வியறிவில்லாத, அரசியல்வாதிகளை காக்காபிடித்துக் கொண்டிருக்கும் பள்ளிவாயல் நிர்வாகிகளும், செல்வந்தர்களின் நன்கொடைகளை எல்லாம் வடித்தெடுத்து மத்ரசாக்களின் நிர்வாக செலவிலேயும், கட்டிடங்கள் கட்டுவதிலேயும் கொட்டித்தீர்க்கும் உலமாக்களுமேயாகும்.
பெரும்பாலான மஸ்ஜித்கள் தகுதியற்ற நிர்வாக உறுப்பினர்களின் அராஜகத்திலும், அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திலும் உள்ளது. வேறு எந்த மத ஸ்தலங்களிலும் இல்லாத ஒரு அக்கிரமம்தான், நமது மஸ்ஜித்களில் இன்று அரசியல்வாதிகளால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் காட்டு தர்பார்களாகும். இது மட்டுமன்றி மஸ்ஜித் நிர்வாகங்களும் ஐவேளை தொழுகை, கஞ்சி விநியோகம் என்ற குறிப்பிட்டதொரு வட்டத்திற்குள்ளேயே நின்றுவிட்டதோடு, மஸ்ஜித்கள் பணம் ஈட்டும் வியாபார ஸ்தலங்களாகவும் மாறிவிட்டன. முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியின்றி மஸ்ஜித்களுக்கு சொந்தமான காணிகள் விற்கப்படுகின்றன. இவ்வாறு நடைபெறுவதற்கு எத்தனையோ ஆதாரங்களைக் காட்டமுடியும்.
பல்வேறு துறைகளில் கல்விகற்றவர்களையும், பட்டதாரிகளையும், சமூகசேவை மனப்பான்மை கொண்டவர்களையும், அரசியல்வாதிகளுக்கு அடிபணியாதவர்களையும் கொண்டதாக மஸ்ஜித் நிர்வாகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதுமட்டுமன்றி புதிய நிர்வாகிகளுக்கு உலமாக்களால், நிர்வாகிகளின் கடமைகள், பொறுப்புக்களை விளக்கும் கருத்தரங்குகளில் பங்குபற்றுவதை முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கட்டாயப்படுத்துவதோடு, இவர்களுக்கான வழிகாட்டி நூல்களும் வழங்கப்பட வேண்டும்.
மஸ்ஜித்களின் நிர்வாகிகளே உங்களின் வருமானங்களை மஸ்ஜித்களிலேயே கொட்டித்தீர்க்காமல் வறிய மக்களுக்கும் கொடுத்து உதவுங்கள். இவர்களுக்கு உதவ பைத்துல்மால்களை அமையுங்கள்.   வறுமையின் காரணமாக மக்கள் குப்ரின் பக்கம் செல்லும் நிலையிலிருக்கும் போது பள்ளிவாயலை புனர்நிர்மானம் செய்து, புதிய மஸ்ஜித்களை அமைத்து, பெயின்ட் அடித்து, எல்லீடி (LED) லைட்டுக்கள் போட்டு என்ன பிரயோசனம்? இப்படிப்பட்ட மஸ்ஜித்களும், நிர்வாக சபைகளும் சமூகத்திற்க்கு அவசியம்தானா?. மஹல்லாவாசிகளின் அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய மஸ்ஜித் நிர்வாகிகள் இன்று மஸ்ஜித்களை வைத்துக்கொண்டு பணம் வசூல் செய்து, கடைகள்கட்டி வியாபாரம் நடத்துகின்றார்கள். இப்படிப்பட்ட நிர்வாகிகளே இன்றைய சமூகத்தின் உண்மையான எதிரிகளாவர்.
நமக்கு இறைவன் கொடுத்த செல்வங்களை வறிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் சமூகத்தின் குறைகளையும், அநாச்சாரங்களையும் பேசுவதிலேயே காலத்தை கடத்திக்கொண்டிருக்கின்றோம். தங்களது செல்வங்களை பூட்டிவைத்துக்கொண்டும், வெளிநாட்டு சுற்றுலாக்களிலும், செய்த பாவங்களை அழிப்பதற்கு உம்றாக்களை அடுக்கிக் கொண்டும் செல்லும் வெட்கம்கெட்ட தனவந்தர்கள் சமூகத்தை தலமைதாங்குவதற்கும், பள்ளிவாயல்களை நிர்வகிப்பதற்கும் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதற்கும் எந்த அருகதையும் அற்றவர்கள். இப்படிப்பட்டவர்கள் சமூக விடயங்களிலிருந்து ஒதுங்கி இருப்பது சமூகத்திற்க்கு இவர்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.

எமது தனவந்தர்கள் தங்களது செல்வங்களில் ஒரு தொகையை நியாயமான முறையில் வறிய மக்களுக்காக கொடுத்து உதவியிருப்பார்களாயின் ஏன் இன்று எமது நாட்டில் 500,000 முஸ்லிம்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ வேண்டும். அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் பயங்கரவாதிகளால் இனச்சுத்திகரிப்பை நோக்கமாகக் கொண்டு வெளியேற்றப்பட்ட எமது உறவுகள் 25 வருடங்கள் கடந்தும் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் ஏன் இன்னும் அகதிகளாக வாழ வேண்டும். அவர்கள் தங்களது அகதிவாழ்க்கையின் நினைவாக வெள்ளிவிழாவையும் கொண்டாடிவிட்டனர். ஆனால் அகதியாய் வாழும் இந்த மக்களைப்பற்றி எமது தலைவர்களும், உலமாக்களும் எந்தவிட வெட்கமும், கவலையும் இல்லாமல் இருப்பதோடு, இவர்களை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்திக்கொண்டிருக்கும் நமது அரசியல்வாதிகளுக்காக நம்மிடையே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றோம்.  

முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும், மாற்று மதத்தினரால் ஆட்சி செய்யப்படும் ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தை தலைமைதாங்கி, அவர்களை நிர்வகித்து, தீனுடைய விடயங்களிலும், வாழ்வியல் விடயங்களிலும் வழிநடத்த வேண்டிய பாரிய கடமையும், பொறுப்பும் உலமாக்களுக்கும், மஸ்ஜித்களுக்கும், மத்ரசாக்களுக்கும் உரியதாகும். சமூகவியலாளர்களும், கல்விமான்களும், அரசியல்வாதிகளும் இவர்களுடன் இணைந்து கொள்வதானது இவர்களின் கையை மேலும் வலுவூட்டுவதாகவும், மிகச்சிறந்த நிர்வாகத்தை இவர்களால் எடுத்துச்லெல்ல மிகவும் உதவியானதாகவும் அமையும். ஆனால் இலங்கையில் உலமாக்களின் 92 வருடம் பழைமை வாய்ந்த உயர்ந்த சபையான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதனை செய்ய தவறிவிட்டதோடு, இன்றும் 25 வருடங்களுக்கு முன்பு இயங்கிய அதே வேகத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது.
அத்தோடு மத்ரசாக்களுக்கும், பொது மக்களுக்குமிடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. மத்ரசாக்கள் நிதி உதவிற்காக மட்டுமே சமூகத்தை அனுகுகின்றனவாக உள்ளன. சமூகத்தை வழிநடாத்தும் விடயங்களிலும், பிரச்சினைகளின்போது உதவிபுரியும் விடயங்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே மத்ரசாக்கள் உள்ளன.
உலமாக்கள் முஸ்லிம்களை நிர்வகிக்க தவறிவிட்டார்கள். எவ்வாறு பள்ளிவாயல்கள் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை முஸ்லிம் கலாச்சார அமைச்சுடன் இணைந்து நெறிமுறைகளை அமைக்க தவறிவிட்டார்கள். முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் சம்பந்தப்பட்ட உலமாக்கள் அழ்ழாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சியவர்களாக இருந்தால் மட்டும்தான் சமூகத்தை வழிநடத்த முடியும்.
இன்று இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பிரதான காரணம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், பழமைவாய்ந்த முன்னனி மத்ரசாக்களும் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களமுமாகும் (இன்ஷா அழ்ழாஹ், இவர்களின் தற்போதைய நிலமை, அவர்களின் பொறுப்புகள், விட்ட தவறுகள், என்பன பற்றிய மேலும் விரிவான விடயங்கள் இன்னுமோர் கட்டுரையில் விரைவில் விபரிக்கப்படும்). இவர்கள் சமூகத்தை நிர்வகிக்க, வழிநடத்த தவறிவிட்டனர்.  இம்மூன்று நிறவனங்களும் ஒன்றினைவதன் மூலமே, பள்ளிவாயல்களை மையங்களாக கொண்டு ஒரு சிறந்த நிர்வாகத்தை கட்டியெழுப்ப முடியும். இதன் மூலம்தான் வறிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் ,எந்தவித கல்வித்தகமையுமற்ற தனவந்தர்களினதும், சமுதாயத்தின் நலத்தை கருத்தில் கொள்ளாமல் இயக்கங்களின் வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் நபர்களிடமிருந்தும் மஸ்ஜித்களை மீட்டெடுத்து, ஒரு மஸ்ஜிதின் நிர்வாகம் நபியர்கள் காண்பித்த முறையில் எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறானதொரு நிர்வாகத்தை அமைப்பதிலும், மகல்லாவாசிகளின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க பக்கபலமாக இருப்பதிலும்தான் ஒரு முழுமையான வெற்றியடைந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.
சமூகத்தை வழி நடாத்தி, சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு முன்னர், சமூகத்தின் நிர்வாகத்திலும், தலைமை வகிப்பதிலும், வழிநடாத்துவதிலும், தொடர்புடைய அனைத்து அமைப்புகளும், மேற்குறிப்பிட்ட குறைகளை போக்கி, மாற்றங்களை தங்களுக்குள்ளே கொண்டு வரவேண்டும். இலங்கை சிறியதொரு நாடாக இருப்பதனால் மிகச்சிறப்பானதொரு நிர்வாகத்தை இம்மூவரும் ஒன்றினைவதன் மூலம் எடுத்து செல்ல முடியும்.
மஸ்ஜித்கள் பைத்துல்மால்களை அமைக்க முன்வர வேண்டும். பைத்துல்மால் என்பது மக்களுக்கான பொது நிதியமாகும். இந்நிதியம் நபியவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் அமுலில் இருந்து வந்துள்ளது. இந்நிதியத்திற்கு யாரும் எவ்வளவையும் அன்பளிப்பு செய்யமுடியும். அந்நிதியிலிருந்து தேவையுள்ள யாவருக்கும் உதவி வழங்கப்படும். கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் போது வயது முதிர்ந்த ஒரு யூதர் யாசிப்பதைக் கண்ட  உமர் (ரழி) அவர்கள் அவரை அழைத்து இனிமேல் யாசிக்க வேண்டாம் எனக் கூறி பைத்துல்மாலில் இருந்து மாதாந்தம் ஒரு தொகையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்கள்.

ஸகாத் கொடுப்போரும், ஸகாத் வழங்க வசதியற்றோரும் எப்பொருளையும் பைத்துல் மாலுக்கு வழங்க முடியும். அதே போன்று தேவையுள்ள யாரும் அதிலிருந்து உதவித் தொகையினை அல்லது வேறு வகையாக உதவியினை பெற்றுக் கொள்ள இது வாய்ப்பாக அமையும். எனவே, “பைத்துல் ஸகாத்” நிதியம் போன்று “பைத்துல்மால்” நிதியம் ஒவ்வொரு பள்ளிவாயலிலும் அமைக்கப்பட வேண்டும். நபியவர்களின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவி எவ்வாறு மக்கள் சேவை மையமாக இயங்கியதோ அவ்வாறே எமது பள்ளிவாசல்களும் இயங்க முன்வர வேண்டும்.

6 comments:

  1. This is exactly true. Brother, thanks for your worthwhile information.
    General public do not have a clear vision of actual demanding of our society. Unfortunately, our leaders fail to understand the actual problem of our society and they fail to educate our people. We should have the wider network to educate our society to eliminate poverty. I welcome all constructive thinkers for constructive alternatives to bring out poors from enduring poverty.

    ReplyDelete
  2. Side effect of Grave worship faith will lead to anything.

    ReplyDelete
  3. None of our Muslims seek wealth to share with fellow Muslims or
    help fellow Muslims to become equals.There are a few Muslims who throw away bit of their wealth insufficiently in an unorganized way to help people in small way . But a huge amount
    of Muslim wealth is being wasted in the name of religion through mosques and overseas trips throughout the year.
    Srilankan Muslims are misled to believe that they are the best
    Muslims in the world . Very foolish thinking . Our people are
    very dangerously ignorant about currently changing world
    situations .World economy is suffering and intelligent people are adjusting their lifestyles.This is not happening in our society due to ignorance ,for example , they are dying to go to Mecca on pilgrimage regardless of their economic or health conditions as if it is obligatory on every Muslim under all circumstances . Is it the case ? They are burdening themselves with unsolicited actions in Islam . They are wasting hard earned wealth in so many ways blindly believing these actions will take them to paradise or they will have rewards here itself. There's a strong need to take the community out of this mess to save them and lead them into the real world where they live intelligently with due respect. Those who die to go to Mecca should also try to visit Welikada and see the percentage of Muslim inmates there . Muslims also have a name for drugs and smuggling ! What are we going to do about all these ? Poverty and extreme poverty on one side and wealth , enough wealth and waste of wealth on the other side. Our community must come up with civil organizations to advise them on various issues they are facing, without leaving the whole community in the hands of religious bodies alone . This article has made greater efforts to point out many weaknesses that need to be addressed . A good one and we need more discussions of this kind to educate people widely on different platforms .

    ReplyDelete
  4. Dear, see how many youg ladies are begging withe their newborn children in front of mosques.If one rich man can responsbility if one such family this would prevent them from begging to a certain extent, everyone of them has heartbreaking stories, recently I came across a woman who lives in kolonnwa (husband has disappeared leaving the family with three children) and this woman walks with 03 children to leave to kotahena school coming back to kolonnawa going to the school again at 1 o clock to bring them back - all 04 trips walking because of no money to spend for buses (per day. this is only one example).

    ReplyDelete
  5. I don't think they are leaving because of poverty. Nowadays Islam is moving towards more extremism, violence and cruelty like ISIS, Boko Haram etc. So the people who want to live normal human life are leaving the religion.

    ReplyDelete

Powered by Blogger.