Header Ads



சிறையிலிருந்து வெளிவர முடியாத குற்றங்களை சிராந்தியும், 2 மகன்களும் இழைத்துள்ளனர் - மைத்திரி

-தமிழில் GTN-

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் கைது இன்னமும் பல வட்டாரங்களில் அதிர்வுகளை உண்டாக்கிவருகின்றது. கடந்த புதன்கிழைம (03.02.2016) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இந்த விடயம் குறித்து விவாதிக்கப்பட்டது. யோசிதவை கைதுசெய்த நிதிக்குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர் ஓருவர் தெரிவித்த கருத்து குறித்து ஐக்கிய தேசிய கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

செவ்வாய்கிழமை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டிருந்தார், குறிப்பிட்ட பிரிவை கலைக்கவேண்டும் என்பதே ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டிருந்தார். யோசிதவிற்கு எதிரான விசாரணைகள் நாட்டின் சாதாரண சட்டங்களின் கீழ் இடம்பெறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஊழல்கள் குறித்தோ அல்லது மோசடிகள் குறித்தோ பொலிஸாரோ அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவோ  விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அரசாங்க தகவல் திணைக்களத்திலேயே அமைச்சர்pன் கருத்துக்கள் வெளியானது முக்கிய விடயம். அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிதிமோசடிகள் தொடர்பிலான விசேட பொலிஸ்பிரிவை விரும்பவில்லை என அமைச்சர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.இதன் மூலம் அக்கட்சியினர் குறிப்பிட்ட பொலிஸ்பிரிவு மேற் கொண்டுவரும் விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என தெரிவிக்கும் அமைச்சர்கள் பலரும் இதே கருத்தை கொண்டுள்ளனர்.

போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்ட விடயம் குறித்து ஜனாதிபதியுடன் ஆலோசிக்காமல் பகிரங்கமாக கருத்து வெளியிட்டமை ஐக்கிய தேசிய கட்சியினரை சீற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. சட்டஓழுங்கு அமைச்சர் சாகல ரத்தினநாயக்க  அமைச்சர் நிமாலின் இந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பினார், அமைச்சரவையின் உறுப்பினர் என்ற வகையில் நிமால் சில்வாவிற்கு கூட்டுபொறுப்புள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்,ராஜபக்சாக்களை காப்பாற்றவா அவர் இவ்வாறு கருத்துகூறினார் எனவும் அமைச்சர் சாகல கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா செவ்வாய்கிழமை தான் வெளியிட்ட கருத்துக்களையே மீண்டும் வெளியிட்டார்.இதனால் சீற்றமடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரான அமைச்சர் மலிக்சமரவிக்கிரம  அமைச்சர் அரசாங்க முடிவுகளை பகிரங்கமாக விமர்சிக்க கூடாது என தெரிவித்தார்.

இதன்பின்னர் நிதியமைச்சரிற்கும் அமைச்சர் எஸ்பி திசநாயக்கவிற்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது, நீங்கள் இரண்டு வருடத்தில் அரசாங்கத்தை அமைக்கப் போவதாக தெரிவிக்கின்றீர்கள், ராஜபக்சாக்களையும் அரசாங்க தலைவர்களையும் ஐக்கியப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றீர்கள், அரசாங்கத்தின் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு எதிர்கட்சியை பாதுகாக்க முயல்கிறீர்களா என நிதியமைச்சர் அமைச்சர் ரவிகருணாநாயக்க எஸ்பி திசநாயக்காவை பார்த்து கேள்வி எழுப்பினார்.

புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன நிதிக்குற்றங்கள் தொடர்பிலான பொலிஸ்பிரிவின் விசாரணைகளில் ஆழமும் உண்மையும் உள்ளதாக தெரிவித்தார்.சிராந்தி ராஜபக்ச மற்றும் அவரத இரு மகன்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பாராதூரமான விடயங்கள் தெரியவந்துள்ளன. அந்த குற்றங்களிற்கு பிணைகூட வழங்க முடியாது  என தெரிவித்தார்.

3 comments:

  1. இவ்வலவு பெரிய குட்டம் செய்திருக்கும் இவர்களை ஏன் பூசிப்பூசி வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் இதை சாதாரண ஒரு பிரஜை செய்திருந்தால் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படுமா?எறும்பாக இருந்தாலும் எல்லா உயிருக்கும் சம அந்தஸ்த்து கொடுக்க வேண்டும் வசதி படைத்தவேர்களுக்கு மட்டும் சட்டம் ஏன் ஒளிந்துகொள்கிறது?சட்டம் ஒரு இருட்டறை என்ற பெயர் வாங்கியதாலா?உண்மையிலேயே சட்டம் ஒரு இருட்டறை இல்லை அது பகிரங்கள் ஒளி விலக்கு எல்லோருக்கும் அதன் ஒழி வீச வேண்டும்.சட்டத்தை மறைக்கும் ஒரு கூட்டத்தால் இட்ட பெயர்தான் சட்டமொரு இருட்டறை என்பது.ஆழமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவரும் இவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு சொல்ல முடியாது.

    ReplyDelete
  2. சட்டம் நமது நாட்டில் நோயுற்றிருக்கும் பொழுது,அரசுகள் மாறி மாறி வருவதில் பயனேதும் கிடையாது. முன்னைய அரசு சட்டத்தை அமுல் செய்வதில் அசட்டையாக இருந்தது, தற்போதைய அரசு கொஞ்சம் தயங்கியது ஆரம்பத்தில். நிலைமை மாறுகிறது தற்போது.

    ReplyDelete
  3. My3 and Ranil should not interfere FCID for their investigation and action as requested by Anura (JVP).

    ReplyDelete

Powered by Blogger.