Header Ads



பாதையை திறக்குமாறு வலியுறுத்தியும் பாதையை திறக்க வேண்டாமென்றும் 2 போராட்டங்கள்

-JM.HAFEEZ-

கண்டி நகரில் இருந்து ஸ்ரீதலதா மாளிகைக்கூடாகச் செல்லும் பாதையை திறந்து விடும் படி ஒரு கோஷ்டி எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நடத்த, அவ்வாறு திறக்கக் கூடாது என்று மற்றுமொரு கோஷ்டி கூச்சலிட கண்டி நகரில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டது.

(19.2.2016 இன்று) நன்பகல் 12 மணி முதல் பி.ப.2 00 மணிவரை மேற்படி முருகல் நிலை காணப்பட்டதுடன் வாவிக்கரையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் கண்டி, தர்மராஜா கல்லூரிப்பக்கமாக இருந்து பேராசிரியர் சரத் விஜேசூரிய தலைமையிலான பிரஜைகள் அமைப்பு ஒன்று பதாதைகள் ஏந்தி சுலோகங்களை கோசித்த வண்ணம் தலதாமாளிகையூடாகச் செல்லும் ஏ-26 பாதையை திறக்கும் படி கோஷமிட்டனர். அவர்கள் ஸ்ரீதலாதா மாளிகையை அண்மித்த போது இரண்டு பௌத்த பிக்குகளுடன் சமூகமளித்த மற்றைய ஒரு கோஷ்டி அவர்களுக்கு எதிராக சுலோகங்களை கோசித்தனர். இதனால் இரு கோஷ்டிகளும் மோதிக் கொள்ளும் சூழ் நிலை உருவானது. சிறிய கைகலப்பும் ஏற்பட்டது.

முதலில் ஆர்பாட்டத்தில் வந்தவர்கள் ஜனாதிபதியே தேர்தல் வாக்குறுதியின் படி பாதையைத் திறவுங்கள், கண்டி நகரையும், ஸ்ரீதலதாமாளினையையும் மல்வத்தை பீடத்தையும் வாயு மாசடைவதின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும், பாதை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் காரணமாக எமது குழந்தைகள் அசுத்தகாற்றைச் சுவாசிக்கின்றனர். நாம் முழுநாளும் நடு வீதியிலே இருக்கிறோம் என்றெல்;லாம் கோசம் எழுப்பினர்.

 அதேநேரம் தலதா மாகைப் பக்கமிருந்த வந்த கோஷ்டியினர் டொலர் நோட்டுக்களுக்கு ஏஙடகழ நிற்கும் காக்கைகள் என்றும் வெளிநாட்டு சதிகாரர்களின் கையாற்றகள் என்றும் கூச்சலிட்டனர். பி.ப. 2 மணியளவில் பொலீசாரின் கண்காணிப்பபில் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.




No comments

Powered by Blogger.