எரிட்ரிய ஆண்கள் 2 திருமணம், முடிக்க வேண்டுமென்பது ஒரு புரளி - முற்றாக மறுக்கிறது அந்நாட்டு அரசு
எரிட்ரிய ஆண்கள் இரண்டு திருமணம் முடிப்பதை கட்டாயப்படுத்தி இருப்பதாக வெளியான செய்தி ஒரு புரளி என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எத்தியோப்பியாவுடனான யுத்தத்தால் நாட்டில் ஆண்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் இதனால் இரண்டு திருமணம் கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. அவ்வாறு இரண்டு திருமணம் முடிக்காத ஆண்கள் ஆயுள் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் என்றும் அந்த செய்தி குறிப்பிட்டிருந்தது.
எனினும் எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியாவுக்கு இடையிலான யுத்தம் கடந்த 1998 முதல் 2000 ஆம் ஆண்டு வரையே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி இணையதளங்களில் உலாவிய இந்த செய்தியை சில ஊடகங்களும் பயன்படுத்தியுள்ளன. இந்த செய்தியை எரிட்ரிய அரசு மறுத்துள்ளது. எரிட்ரியாவில் பலதார மணத்திற்கு தொடர்ந்து தடை இருப்பதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
“(எரிட்ரிய தலைநகர்) அஸ்மராவில் இருக்கும் பைத்தியக்காரன் கூட இந்த செய்தி பொய் என்பதை தெரிந்திருப்பான்” என்று எரிட்ரிய அதிகாரி ஒருவர் பி.பி.சி. செய்திக்கு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதே பொய்யான செய்தி இதற்கு முன்னர் ஈராக், சூடான் மற்றும் சவூதி அரேபிய நாடுகளையும் குறிப்பிட்டும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment