நீதிமன்றிற்கு சென்ற மகிந்த - யோசிதவின் பிணை மனு 29 இல் விசாரணை
யோசித ராஜபக்ஸவின் பிணை மனு விசாரணைகளை நேரில் பார்வையிடுவதற்காக கொழும்பு உயர்நீதிமன்றிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சென்றுள்ளார்.
மஹிந்தவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிதிச் சலவை குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதி முதல் யோசித கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யோசித உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவின் பிணை மனு எதிர்வரும் 29ம் தகித விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
2
பிணை மனுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்ற நீதவான் ஏ.ஆர். ஹய்யன்துடாவ மனு 29ம் திகதி விசாரணைக:கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.கடுவல நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்த தகவல்களை உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் கோரியுள்ளார்.
யோசித உள்ளிட்ட ஐந்து பேர் பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
"மகனை ஊழலினுள் நாமே வலிந்து திணித்து விட்டோமே" என்ற கவலை தந்தைக்கு இருக்கும். கார் பந்தயத்தை மகனின் டீவி சனல் ஊக்குவிக்க, சமகாலத்தில் பந்தயக்கார்களுக்கான வரியை தந்தை நீக்கி விட அடுத்த மகன் அந்த வகையரா கார்களை இறக்குமதி செய்தார்.
ReplyDelete