துருக்கி தலைநகரில் வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி, 60 பேர் காயம்
துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்த்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இது கார் வெடிகுண்டு தாக்குதல் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததோடு, அந்த இடமே தீ பிளம்பாக காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் பிரதமர், பாதுகாப்புத் துறை மந்திரி ஆகியோரது அலுவலகங்களுக்கு அருகில் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட தகவலின் படி 28 பேர் உயிரிழந்ததாகவும், 60 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த தாக்குதல் ராணுவ வீரர்களை ஏற்றி செல்லும் பேருந்தினை குறித்து நடைபெற்றதாக துருக்கி ராணுவ தலைமை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துருக்கி பாராளுமன்றத்திற்கு அருகில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
Post a Comment