அரசு பணியில் சேராமல் ஊதியம்பெற்ற 24,000 மர்மநபர்கள்
நைஜீரியா நாட்டில் அரசு பணியில் சேராமல் பல வருடங்களாக ஊதியம் பெற்று வந்த ’மர்ம’ நபர்கள் 24,000 பேர் மீது அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக முகமது புகாரி கடந்தாண்டு பதிவியேற்றார்.
பதவியேற்றதற்கு பின்னர் நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்கும் விதத்தில் சிறப்பு தணிக்கை குழு ஒன்றை நியமனம் செய்தார்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த குழு அரசு நிதி துறை அலுவலகங்கள் பலவற்றில் செய்த அதிரடி சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அதாவது, அரசு பணியில் இல்லாத நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பல ஆண்டுகளாக அரசு ஊதியம் சென்றுக்கொண்டு இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இதனை மேலும், ஆய்வு செய்தபோது அரசாங்க ஊழியர்கள் பலர் அரசுக்கு தெரியாமல் வெவ்வேறு பெயர்களில் வங்கி கணக்குகள் தொடங்கி அரசிடம் ஊதியம் பெற்று வந்துள்ளனர்.
இவ்வாறு ஊதியம் வழங்கப்பட்டதால் அரசுக்கு மாதம் 11.5 மில்லியன் டொலர் கூடுதலாக செலவாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், பணியில் இல்லாத அந்த 23,846 மர்ம நபர்களின் வங்கி கணக்குகளை அதிரடி நீக்க உத்தவிரவிட்டுள்ளார்.
மேலும், இந்த முறைகேட்டில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்கள் மீது விசாரணை நடத்தும் படி ஜனாதிபதி முகமது புகாரி உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment