Header Ads



ஞானசாரருக்கு 23 ஆம் திகதி வரை, விளக்கமறியல் நீடிப்பு


பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை, சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக, ஞானசார தேரர் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக, சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, தேரரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு கடந்த 10ம் திகதி ஹோமாகம நீதிமன்றம் பிணை வழங்கியது.

எதுஎவ்வாறு இருப்பினும் சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்தநிலையில் இன்று அவரை ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. நான்கு பன்சலைகளுக்குச் சென்று புத்தரின் நற்போதனைகள் புரியும் தனக்குரிய பணியைச் செய்யாது,வேறு பணிகள் செய்ததன் பயனை அறிவதற்கு இப்போதாவது இந்த ஞானருக்கு ஞானம் வருமா?

    ReplyDelete
  2. சகோதரர் waaz mw நீங்கள் சொல்வதுதான் செரி. ஆனால் இவர் மதகுருவாக இருந்தால் ok.அவன் ரவுடி. இதைதான் சொல்வது நாய்டவேலையை நாய் பார்க்க வேண்டும் கழுதட வேலையை கழுதை பார்க்க வேண்டும் என்பது.

    ReplyDelete
  3. Gnasooniangalukku eppadi gnanam varum.

    ReplyDelete

Powered by Blogger.